பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கம்பனில் மக்கள் குரல் சென்ற பரதன் ஆயிரம் இராமர்களும் அவனுக்கு ஒப்பr கார் என்று குகளுல் பாராட்டப் பெற்றவன், தனக்குத் தம்பியாக வாய்த்த காரணத்தால் இராமனுக்கு மந்தரை வின் சூழ்ச்சியால் நேரிடவிருந்த பலவகைத் துன்பங்களும் விலகிப் போகின்றன. இராமன் பெயரை வைத்துக் கொண்டு பரதன் நாட்டையாண்டு வந்ததால், பதினன்கு ஆண்டுகளிலும் நாட்டில் யாதொரு குழப்பங்களும் உண் டாகவில்லை. சுக்கிரீவனின் நட்பாலும் வீடணனுடைய சேர்க்கையாலும் சிறைப்பட்ட செல்வியின் இருப்பிடத்தை அறிவதிலும் அவளே மீட்பதிலும் பல ஆதரவுகள் கிடைக் கின்றன, மலைபோல் காணப்படும் பல சங்கடமான் கட்டங்கள் யாவும் பணிபோல் மறைந்து விடுகின்றன என்பதை இராமாயணக் கதையை அறிந்தவர்களுக் கெல்லாம் தெரியும். ஆளுல், இராமன் பின்புப் பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் ஆகிய இலக்குவன் தம்பியாக அமைந்த காரணத்தினுல்தான் இராமன் எவ்விதப் பகைக் கும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடு கின்றது. அன்பே வடிவாக உடைய பரதனே இலக்குவனை 'யான் ஏன்றும் முடி(வு) இலாத துன்பத்துக் (கு) ஏது வானேன் அவன் அது துடைக்க நின்ருன்' என்று பாராட்டுகின்ருன். அவன் என்றது, இலக்குவனே, இத்தகைய இலக்குவன் தனக்குத் தம்பியாக அமைந்த காரணத்தாலும், தனது வாழ்விலும் தாழ்விலும் தன்னை நிழல்போலத் தொடர்ந்து வந்ததாலும், இராமன் முன்பு எவ்விதப் பகையும் எதிர்த்து நிற்கவில்லை என்பதை இராமனே ஒரு தடவையன்று, பல தடவைகளில் பாராட்டியுள்ளான்.

  • * 4 --بولايت يوه وي * 4