பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத் தம்பி ኒ? சீதையை மீட்டுவிக்க இராமன் இராவணனுடன் போரிடும்போது இராவணனுக்குப் பக்க பலமாய் இருந்து கடுமையாகவும் உக்கிரமாகவும் போர் புரிந்தவர்களில் இராவணனுடைய முதற் புத்திரனை இந்திரசித்து குறிப் பிடத்தக்கவன். தூது செல்லும்போது எவராலும் எதிர்த்து நிற்க முடியாத அநுமனே மலரவன் படையால் கட்டிக் கொணர்ந்து தன் தாதை முன் நிறுத்தியவன். இவன் பெயரைக் கேட்ட மாத்திரத்தானே குரங்குப் படையின் குலே நடுங்கும்; அவ்வளவு கொடுமையாகப் போர் புரிந்தவன். கும்பகருணனுக்குப் பிறகு அதிகாயனைப் பலி கொடுக்கின்ருன் இராவணன். அ. தி க | ய னே க் கொன்றவன் யார் என்பதை இராவணல்ை அறிந்தவுடன் அவனிடம் இவன், கொன்ருர் வரோய்? கொலைசூழ்க என நீ கொடுத்தாய்' என்று கூறிக் கோபிக்கின்ருன். அட்சயனைத் தரையோடு தரையாகத் தேய்த்த அநுமனே தூது வந்த அன்றே கொல்லாததனால் ஏற்பட்ட விளைவுதான் இது என்று எடுத்துக் காட்டுகின்ருன் இராவணனுக்கு. தந்தையின் அமைதி பெற்றுப் பெருஞ்சேனையுடன் வந்து இலக்கு வைேடு பெருஞ் சமர் விளைவிக்கின்ருன்; ஆத்திரத் துடன் சண்டையிடுகின்ருன். வானரத் தலைவர்களையும் ஏனைய வீரர்களையும் நிலை கலங்கும்படி செய்துவிடு கின்ருன். அதுமன், அங்கதன், நீலன் முதலியவர்கள்கூடக் சோர்வு அடைந்துவிடுகின்றனர்; அவ்வளவு ஆங்காரத் துடன் பெரும் போர் புரிகின்ருன். இலக்குவனுக்கும் அவனுக்கும் பலத்த போர் நடக்கின்றது. இலக்குவனும் அநுமன்மீது ஏறிக்கொண்டு அருஞ்சமர் விளைவிக்கின்ருன். இரவு வருகின்றது. இந்திரசித்து வானத்தில் மறைந்து விடுகின்ருன். இந்திரசித்து போய்விட்டான் என்று தி. தாகபாசப்-7