பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள் குரல் போரொழிந்து இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, விண்ணிலிருந்து அவன் விடுத்த நாகபாசம் அனைவரையும் பிணித்து விடுகின்றது; இலக்குவனும் கட்டப்பெறுகின்ருன். இராமனே நேரில் இந்நிகழ்ச்சிகளைத் தன் கண்களால் காண்கின்ருன். மற்ருெரு சமயம் இலக்குவனுடன் கடும் போர் புரிந்து இந்திரசித்து மறையவன் படையை ஏவிவிடுகின்ருன். அத்திரத்தின் வேகம் தாங்காது அநுமன் சோர்ந்து விழு கின்ருன்; சுக்கிரீவன் தரையில் விழுகின்ருன். அங்கதனும் சாம்பவானும் நெடுநிலத்தில் சாய்கின்றனர். நள்ன், மயிந்தன், துமித்தன், கவயன் முதலிய வானரத் த&வர்கள் யாவரும் மாண்டு போகின்றனர். வானரங் களும் இவ்வாறு ஆகின்றன. இலக்குவனும் வலிய யானை பொன்று படுக்கையிடத்தில் அடங்கியதுபோல் உணர்வு ஒடுங்கிக் கிடக்கின்ருன். இக்காட்சியையும் இராமன் தேரில் காண்கின்ருன். இவ்வாறு யாவருக்குமே சிம்ம சொப்பனமாய் இருந்து வந்த இந்திரசித்து அநுமன் முன்னதாக மாயா சீதையை வெட்டி வீழ்த்திவிட்டு, அயோத்தி மீது சென்று அங்குள்ளவரைக் கொல்லப்போவதாகப் போக்குக் காட்டி விட்டு, நிகும்பலை யாகத்துக்குப் போகின்ருன். நிகும்பலை யாகம் வெற்றியுடன் முடிந்தால்தான் இராம இலட்சுமணர் களை எளிதில் வெல்லமுடியும் என்று எண்ணியே இவ்வாறு செய்கின்ருன். இதை வீடணன் மூலம் இராமன் அறிந்து, இலக்குவனையும் யாகத்தைச் சிதைத்து வருமாறு அனுப்பு கின்ருன், "எண்ணுயிரம் கோடி இராவணரும் வீண்ணுடரும் வேறுல கத்கெவரும் கண்ணு ஒரு மூவரும் கண்ணிடினும்" இநண்ணு-கிட்டுதற்கு அரிய) 5. அகதிகாயன்வதை.78