பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத் தம்பி 29 இலக்குவன்முன் நிற்கமுடியாது என்பதை இராமன் அறித்துதான் நிகும்பலை வேள்வியை அழித்து இந்திரசித்தை யும் கொன்று வரும்படி அவனே அனுப்புகின்ருன். இலக்கு வனின் அம்பால் அதிகாயன் மாண்ட அன்றே வீடணனும் இலக்குவனுடைய வில்லாற்றலைக் கண்டு மெச்சி, "மந்திர சித்தி யன்ன சிலைத்தொழில் வலியி தாயின் இந்திர சித்தி ஞர்க்கும் இறுதியே இயைவது என்று : எண்ணுவதில் வியப்பு ஒன்றும் இல்லே. இலக்குவன் செல்லு வதற்குமுன் ஒவ்வொரு கணையையும் எவ்வெவ்வாறு ஏற்ற சமயங்களில் பிரயோகிக்கவேண்டும் என்பன போன்ற விவரங்களைச் சொல்லியனுப்புகின்ருன் இராமன். இலக்குவன் தான் புறப்படுவதற்கு முன்னதாகக் கண்ணிர்த்துளிகளுடன் வருந்திநின்ற இராமனே வலஞ் செய்து வணங்கி வஞ்சனுசிய இந்திரசித்தின் தலையை அன்று கொண்டுவருவதாகச் சபதம் செய்து மிகக் கோபத்துடன் செல்கின்ருன். தான்பிரி கின்றி லாத தம்பிவெம் கடுப்பிற்.செல்லா ஊன்பிரி கின்றி லாத - உயிரென ே |வெம் கடுப்பு-மிக்க கோபம்; செல்லா-சென்று) மறைந்தவுடன், வேள்வி காத்தற்பொருட்டு விசுவாமித் திரருடன் தன்னை அனுப்பியபோது தான் மறையக் கண்ட தசரதன் நிலையை அடைகின்ருன் இராமன். சிவபூசை யில் கரடி புகுந்தாற்போல, நிகும்பலேயாகத்தை வானரப் படை சிதைத்து விடுசின்றது. 7. அகதிகாயன் வதை-2.98 8. நிகும்பவே .61