பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} கம்பனில் மக்கள் குரல் மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின் மோனமும் பாழ்பட முடிவி லாமுரண் சேனையும் பாழ்படச் சிறந்த மந்திரத்து ஏனையும் பாழ்பட்டு விடுகின்றன. வேள்வி சிதைந்தது தனக்கு அன்று வெற்றியில்லே என்பதற்கு அறிகுறியாக இருந் தாலும் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு போருக்குப் புறப்படுகின்ருன் இந்திரசித்து. தன்னிடமுள்ள சகல வித அத்திரங்களையெல்லாம் தொடுத்து அன்று போர் செய்கின்ருன். அவையனைத்தையும் இலக்குவன் ஏற்றவாறு சிதைத்துவிடுகின்ருன். ஒரு சமயத்தில் திடீரென்று இந்திர இத்து மறைந்துவிடுகின்ருன். இராவணனிடம் சென்று நிகும்பலே யாகம் சிதைந்தமையையும், இலக்குவனுடைய பராக்கிரமத்தையும் கூறிச், சீதையைவிட்டுவிடுவதே செய் பத்தக்கது என்று உரைக்கின்றன். அதற்கு இராவணன், முன்னேயோர் இறந்தோர் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும் பின்னையோர் கின்ருேர் எல்லாம் வென்றவ்ர்ப் பெயர்வர் என்றும் உன்னை நீ அவரை வென்று தருதியென் (று) உணர்ந்தும் அன்ருல் என்னையே நோக்கி யான்இந் நெடும்பகை தேடிக் கொண்டேன் 10 என்ற கூறி, உயிர் போனலும் சீதையை விட முடியாது என்று பிடிவாதமாக இருக்கின்ருன். உடனே இந்திரசித்து தன் தந்தையின் அடிகளை வணங்கி மீண்டும் போருக்கு வருகின்ருன். தனது முழு வலியைக்கொண்டு போர் 9. நிகும்பலை.81 .ே இந்திரசித்து வதை-8