பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத் தம்பி 31 புரிகின்ருன், இளையபெருமாளும் அவனது ஆற்றலே வியக்கின்ருன். சுத்தவீரனை ஓர் இந்திரசித்தைச் சுத்த வீரனை ஓர் இலக்குவன்தானே மதிப்பிடமுடியும்? பலவிதமான மாயப்போர் புரிந்த இந்திரசித்தன் கரத்தை அறுத்து வீழ்த்துகின்ருன் இலக்குவன். இறுதியில் இராமன் சிறந்த அறக்கடவுள் என்பது உண்மையாளுல் இவனைக் கொல்லக் கடவாய்!” என்று பிறையம்பொன்றை மந்திரித்து விடுகின்ருன். அந்த அம்பு. கேமுயும் குலிச வேலும் நெற்றியின் நெருப்புக் கண்ணுன் நாமவேல் தானும் மற்றை நான்முகன் படையும் காணச் ' (நேமி-திருமாலின் சக்கரம்; குலிசம்-இந்திரனு: டைய வச்சிராயுதம், நாம வேல்-நான்முகன் படை-பிரம்மாத்திரம்) சென்று இந்திர சித்தினுடைய தலையை அறுத்து வீழ்த்து கின்றது. அரக்கர் சேனை கலைந்து ஒடுகின்றது. இந்திரசித்தின் தலையை அங்கதன் எடுத்துக்கொள்ள அனைவரும் இராமன் இருக்குமிடத்தை நோக்கி வரு கின்றனர். அங்கதன் அரக்கன் தலையை எடுத்து வருதலைக் கண்டு எல்லோருமே களிப்படைகின்றனர். இனிமேல் நல்லவர்கள் தலையெடுக்க முடியும் என்று வானவரும் மண்ணவரும் எண்ணி மகிழ்கின்றனர். இலக்குவன் அரக்கன் தலையைப் பாதகாணிக்கையாக வைத்து இராமனை வணங்குகின்றன். இராமனுக்கு ஒரே வியப்பு; எல்லையற்ற மகிழ்ச்சி யடைகின்ருன்; அரக்கன் தலையினை நோக்குகின்ருன், 11. டிெ.52