பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள் குரல் வெற்றித் திருமள் தழுவிய தம்பியின் பொற்ருேளாகிய மலையினை நோக்குகின்ருன்; காற்றின் மைந்தளுகிய அநும னுடைய வலியை எண்ணிப்பார்க்கின்ருன்: தம்பியின் வில் வலியைச் சிந்தித்துப் பார்க்கின்ருன், இப்படியெல்லாம் எண்ணி எண்ணி மகிழும் இராமன், "கம்ப மதத்துக் களியானக் காவற் சனகன் பெற்றெடுத்த கொம்பும் என்பால் இனிவந்து குறுகி குள் என்(று) அகம் குளிர்ந்தேன்; வம்பு செறிந்த மலர்க்கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில் தம்பி புடையான் பகையஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால்: :கம்ப மதம்-கட்டுத் தறி, களியானே.மதயான; வம்பு.மணம்; மலர்க் கோயில் மறையோன். தாமரை மலரை வாழிடமாகக் கொண்ட நான்முகன்; மாற்றம்-சொல்) என்று இலக்குமணனைப் பாரட்டுகின்ருன். இதுகாறும் சீதையின் பொருட்டே இவ்வளவு தூரம் போரிட வேண்டியிருந்த இராமன் இலக்குவணனப் பார்த்து, தம்பி, இன்றே சனகன் பெற்றெடுத்த கொம்பு போன்ற சீதை என்னே அடைந்துவிட்டாள் என்ற எண்ணத் தால் என் உள்ளமெல்லாம் குளிர்ந்துவிட்டது. தாமரை மலரை வாழ்விடமாகக்கொண்ட நான்முகன் உண்டாக்கின இவ்வுலகத்தில் தம்பியை உடையவன் எந்தவிதமான பகைக்கும் அஞ்சவேண்டியதில்லே என்ற பலமொழிக்கு நீயே சான்முக நிற்கின்ரு ய்” என்று புகழ்கின்ருன். இராவ ணனுக்கு எல்லா விதங்களிலும் வலக்கை போன்றிருந்த இந்திரகித்து இறந்து பட்டதால், இராவணனும் அழிந்து 18. டிெ-59