பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத் தம்பி 88 படுவது உறுதி என்ற எண்ணமும் இராமனிடம் தோன்றி விடுகின்றது. எல்லா விதத்திலும் சாமர்த்தியமுடைய இத் தம்பி இராமன் காளை வந்தபோது அவனேக் காப்பதற்காக வந்தது இராமனது நற்பேறு என்றுதான் சொல்லவேண் டும், இதுமட்டுமா? ஒரே தாய்வயிற்றில் இராம இலட்சு மணர்கள் பிறக்காவிட்டாலும் சிறுவயது முதற்கொண்டே விடாது பொருந்திய நூல் இழைபோல ஒருவரை விட்டு ஒருவர் பிரியாது இகுத்து வந்தனர். இதை நன்கு அறிந்த தசரதன் தருவனத்துள் தான் இயற்றும் தவ வேள்வி யைக் காப்பதற்கு நின் சிறுவர் நால்வரினும், கரிய செம் மல் ஒருவனத் தந்திடு என்று விசுவாமித்திர முனிவர் கேட்டபோதுகூட இராமனுடன் இலக்குவனேயும் சேர்த்தே தருகின்றன். இ ல க் கு வனே ஈன்ற சுபத்திரா தேவியும் மகா உத்தமி; தருமதேவதை போன்ற வள். இராமனுடன் நீயும் காட்டிற்குச் செல்க' என்ற உத்தரவை அவள் வாயினின்று இலக்குவன் எதிர்பார்த்த போது அவளும், ஆகாத (து) அன்(று) ஆல் உனக்(கு); அவ்வனம் இவ்வ யோத்தி மாகாதல் இராமன் அம் மன்னவன் வையம் ஈந்தும் போகா உயிர்த்தாயர்கம் பூங்குழல், சீதை:' என்றே : நினைத்துக்கொண்டு காட்டிற்குச் செல்க, இங்கு இனிமேல் நிற்றல்கூட குற்றம் என்று சொல்வி அனுப்புகின்ருள். அத் துடன் விட்டாளா? பின்னும் கூறுகின்ருள்: 13. நகர் நீங்கு-151 க,-3