பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கம்பனில் மக்கள் குரல் மகனே இவன் பின்செல்; தம்பி என்னும் படியன்று; அடியாரினில் ஏவல் செய்தி, மன்னும் நகர்க்கே இவன் வந்திடில் வாஅ தன்றேல் முன்னம் முடி என்றனள்.' இலட்சுமணு, நீ இராமன் பின்தான் செல்லவேண்டும்; செல்லும்போது உன்னைப் பார்ப்பவர்கள் யாவரும் இராம னுடைய தம்பி என்று எண்ணுது, அவனுடைய அடிமை என்று எண்ணும்படி நீ நடந்துகொள்ள வேண்டும். இராமன் இந்த அயோத்தி நகருக்கு மீண்டும் திரும்பி வந்தால் நீயும் வா. அப்படியல்லாமல் மாருக ஏதேனும் நடைபெற நேர்ந்தால், வரும் ஆபத்தில் நீ முன்னதாக உயிரைவிடு: என்றல்லவோ கூறியனுப்புகின்ருள்? இத்தகைய தியாக உள்ளம் படைத்த தாய்மார்கள் அல்லவா இன்று நமது தாட்டிற்குத் தேவை. சிற்றன்னேதர்ன் இராமனேக் காட்டிற்குப் போகுமாறு செய்தாள் என்ற செய்தியைக் கேட்டவுடனே இலக்குவன் மூட்டாத காலக்கடைத் தீjஎனக் கோபம் கொள்கின்றன். போர்க்கோலத்தளுகித் தனுவேந்தித் தெருவில் நின்று கொண்டு யானே இராமனுக்கு மெளலி கவிக்கப் போகின் றேன். தடுப்பவர் வந்து தடுக்கட்டும்’ என்று போர் முழக்க மும் புரிசின்ருன். இங்ங்னம் காற்று தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் ஆருக்கனல் போன்ற இலக்குவனிடம் அஞ்சன் மேகம் போன்ற இராமன் பொறு பொறு’ என்று மாருத் தனிச்சொல் துளிமாரி வழங்கிக் கொண்டு வருகின்ருன். எல்லாம் விதிவழிதான் நடை பெறும் என்று அவனுக்கு எடுத்துக்கூறி,"உன் விருப்பத்திற்கு மாருக நடப்பவர் பெற்ற தாயும் தந்தையும் ஆவர் என்ருல் நீ கோபிப்பது சரியன்று’ என்று எடுத்துக்காட்டு கின்ருன். அன்பும் கோபமும் கலந்து நிறைந்து ததும்பும் திலையிலுள்ள இலக்குவன், 14. தகர் நீங்கு-15'