பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அறங்கடந்தவர் செயல்: இராமாயணக் கதையை அறியாத தமிழ்மக்கள் இரார் என்றே சொல்லிவிடலாம். சங்ககாலத்திற்கு முன் பிருந்தே இக்கதை தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது. 12-ஆம் நூற்ருண்டில்தான் இக்கதை தமிழில் காவிய உருவத்தில் அமைந்தது என்ருலும், அதற்கு முன்னர் இக் கதையில் பல நிகழ்ச்சிகளைப் பல சந்தர்ப்பங்களில் பலர் கையாண்டிருக்கிறனர். அகநானூறு என்ற தொகை நூலி லுள்ள ஒரு பாடலில்,இராமாயணக் கதையிலுள்ள ஒரு நிகழ்ச்சி உவமையாக எடுத்தாளப்பட்டிருப்பது இதற்கு ஒரு சான்ரு கும். களவு ஒழுக்கத்தில் ஒழுகிவரும் காதலர்கள் திருமணம் செய்து கொண்டபிறகு அவர்களைப்பற்றி ஊரில் எழுந்த அலர் அடங்கிவிடுகின்றது. இதனை விளக்குவதற்கு வரும் உவமை இராமாயணக் கதையைப்பற்றியது. இராமன் சீதையை மீட்கும் பொருட்டு இலங்கைக்குச் செல்லும் போது தனக்குத் துணையாக வந்த சுக்கிரீவன், அநுமன் முதலியோருடன் ஒர் ஆலமரத்தின் அடியில் தங்கி அரிய வேதங்களே ஆராய்ந்து கொண்டிருந்தாளும். அப்போது ஜனநாயகம் (ஜனவரி 1956) இதழில் வெளிவந்தது.