பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறங்கடந்தவர் செயல் ፱ን அம்மரத்தின்மீதிருந்த பறவைக் கூட்டங்கள் ஒலித்து அவருக்குத் தொந்தரவைக் கொடுத்தனவாம். இராமன் தனது ஆணையால் அவ்வொலியை அடக்கிவிட்டானம். அதுபோலவே காதலர்களைப்பற்றிய ஊராரது துரற்றல் பேச்சும் அடங்கிவிட்டது என்று அப்பாடலில் வருகின்றது. வெல்போர் இராமன் அருமறைக் கவிந்த பல்வீல் ஆலம் போல ஒலியவிங் தன்றுஇவ் அழுங்கல் ஊரே." (மறை.வேதம்; பல் ஆலம்.ஆலமரம்; அவிந்தன்று அடங்கியது போல) என்ற பாட்டின் பகுதி மேற்குறித்த நிகழ்ச்சியைத் தெரிவிக்கின்றது. இராமாயணக் கதையில் வரும் பாத்திரங்கள் பல உண்மைப் பொருள்களை விளக்குவன்வாக உள்ளன. அவ் வுண்மைப் பொருள்கள் யாவும் நமது அன்ருட வாழ்க்கைக் குப் பயன்படுபவைகளாகவே அமைந்திருப்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்கு எளிதில் புலகுைம். இராமனது வரலாறு ஒரு போக்கில் நமக்குப் பாடம் புகட்டுவது போலவே இராவணனுடைய வரலாறும் மற்ருெரு போக்கில் நமக்குப் படிப்பினையாக அமைகின்றது. இராமன் கதை உடன் பாட்டில் பாடம் புகட்ட, இராவணன் கதை எதிர்மறையில் அதனைப் புகட்டுகின்றது. இராவணன் தோள் பலத்தாலும் வர பலத்தாலும் புகழ்பெற்றவன். குலத்தைப்பற்றிப் பெருமை கொள்ளு பவர்களுக்கு இராவணன் சிறந்தவனுக விளங்குவான்; ந்ான்முகனுக்குக் கொள்ளுப்பேரனல்லவா? கல்விக்கடலின் கரையைக் கண்டறிந்தவன் என்று சொன்னலும் அவன் விடயத்தில் பொருந்தும், வேதங்களையும் சாத்திரங்களையும் 4. அகம்:70