பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கம்பனில் மக்கள் குரல் நன்முகக் கற்றிருந்தான். அவன் ஓதி உணராத கல்வித் துறைகளே இல்லையென்றுகூடச் சொல்லிவிடலாம். புயபலமும் வரபலமும் மிக்க பல சேவீைரர்கள் அவ இக்குக்கீழ் இருக்கின்றனர். அவர்களுள் அகம்பன், நிகும்பன், மகோதரன் முதலியோர் குறிப்பிடத்தக்க வர்கள். ஐராவதத்தின் நான்கு தந்தங்களையும் பிடுங்கிக் கொண்டு பொன்மயமான பெரிய மலையொன்று திரிவது போலத் திரிந்த கும்பகருணனைத் தம்பியாகப் பெற்றிருக் கின்ருன். மகாவீரனை இந்திரசித்து, வீரத்தில் அவனுக்குச் சமமான அதிகாயன் ஆகியவர்கனை மக்களாகப் பெற்றிருக் இத்தகைய துணைவரின் பலத்தையுடைய இராவணன், தனயன் நான்முகன் தகைமகன் சிறுவதற்குத் தவத்தால் முனைவர் கோன்வரம் முக்களுன் வரத்தொடும் உயர்ந்தான்" (தனயன்.மகன்; நான்முகன் தகைமகன்-பிரம்மா வினுடைய நற்குணம் மிக்க குமாரன்; இவன் புலத்தியப் பிரம்மா, முனைவர் கோன். அந்தணர் தலைவன் பிரம்மா, முக்கணுன்.சிவ பெருமான்; அரிய தவம்புரிந்து நான்முகனிடத்திலும் சிவபெருமா னிடத்திலும் பல வரங்களைப் பெற்றவன். திக்குவிசயம் செய்தபோது கைலாய மலையையே வேருடன் வாங்கிப் பக்கத்தில் எறிந்துவிட்டுத் தேரினை தேராகச் செலுத்திச் செல்ல முயன்றவன் என்ருல் அவன் புயவலி எளிதானதா? .ே இலங்கை கேள்வி.52