பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莓 கம்பனில் மக்கள் குரல் மான்கூட்டம் புலியைக் கண்டு பயந்ததைப்போல குபேரன் இவனைக்கண்டு பயந்து தனது செல்வம், நவ நிதிகள் மாணம், விமானம் ஆகியவற்றையெல்லாம் இழந்து விடுகின்ருன். எல்லா உயிர்களையும் கவரும் யமன்கூட அவனைச் சிம்மசொப்பனமாகக் கருதிப் பயந்து, தன் உயிரைக்குறித்து எண்ணமிட்டுக் கொண்டிருக்கின்ருன் இன் தும் அவனுடைய ஊராகிய இலங்கையைச் சூரியன் மட்டு மல்ல, அவன் சாரதியாகிய அருணன்கூட கண் எடுத்துப் பார்க்க அஞ்சுகின்ருன் வருணனும அவனுடன் சமர்புரிந்து தனது பாசப்படையை இழந்து கடலில் ஒளிந்து கொண்டு விடுகின்ருன். இத்தகைய பேராற்றலேயுடைய இராவணனுக்குத் தேவர்களும் திரிமூர்த்திகளும் அடங்கி அவன் இட்ட வேலைகளைச் செய்து வருகின்றனர். அநுமன் அசோக வனத்தில் மறைந்து கொண்டு நிகழ்ச்சிகளைக் கவனிக்கும் போது, பலவித விருதுகளுடன் இராவணன் சீதையிருக்கும் இடத்திற்கு வருவதைக் காண்கின்ருன். இராவணன் வரும்போது அவனுக்கு முன்னல் ஊர்வசி அவனது உடை வாளே ஏந்தி வருகின்ருள்; மேனகை வெற்றிலை மடித்துத் தந்துகொண்டே வருகின்ருள்; திலோத்தமைசெருப்பினைத் தாங்கிக் கொண்டு வருகின்ருள். ஏனைய தேவமாதர்கள் அவனேச் சூழ்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். எட்டுக் கோடி மகளிர் புழுகுத் தைலம் விட்டு ஏற்றிய விளக்கு களைத் தாங்கிக்கொண்டு வருகின்றனர். இம்மகளிரின் உடலில் உயர்ந்து தோன்றும் இரத்தினபரணங்கள் இருளை யெல்லாம் விலக்கி விடுகின்றன. இக்கட்டத்தில் இராவண னது பல்வகைச் சிறப்புகளையும் கம்பன் மிக விரிவாகக் காட்டுகின்ருன். அசோகவனத்தை அழித்த அநுமனே இந்திரசித்து நாகபாசத்தால் கட்டி இராவணனின் அரண்மனைக்குக் கொண்டுவரும்போது இராவணன் கொலுவீற்றிருந்த வைபவத்தை நமக்கு அறிவிக்கும் மூலமாக இராவணனது