பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#% கம்பனில் மக்கள் குரல் செய்து கொண்டிருக்கின்றன என்பதைக் கம்பன் காட்டு இராவணனுடன் பிணங்கிய மகளிரின் முகத்தில் துளிர்க்கும் இன்பச் சுவையாகிய தேனை ஒரு முகம் நுகர் கின்றது; அவனுடன் கூடின. பெண்களின் முகத்தில் தோன்றும் களிப்பாகிய மதுவினை ஒருமுகம் பானம் செய் கின்றது. தன்னிடத்து வேட்கையுடன் இசை பாடிய மகளிரின் முகத்தில் தோன்றும் காதற்குரிய நங்கையரின் முகத்தில் தோன்றும் அபிநய ரசத்தை ஒருமுகம் அருந்துகின்றது. ஒருமுகம் தன்கீழ்வாழும் தேவர்களாகிய குடிகளுடன் அளவளாவி அரசாட்சி நடத்துகின்றது. ஒரு முகம் மந்திரி, பிரதானிகள், சேனதிபதிகள் ஆகிய மூவருடன் கலந்து ஆலோசனை செய்கின்றது. ஒருமுகம் தீய சிந்தனைகளின் குறிப்பை வெளியிட்டுக் கொண்டிருக் கின்றது. ஒருமுகம் மாதர்கள் கையிற் காட்டுகின்ற கண்ணுடியில் தன் அழகைக் காண்கின்றது, கடைசி இரண்டு முகங்களும் அவனுக்கு அழிவைத் தரக்கூடிய காரியங்களில் ஈடுபட்டிருக்கின்றன. பூவை சானகி உருவொடு ஒருமுகம் பொருந்திக்" கொண்டிருக்கின்றது. அதுமட்டுமா? காந்தன் மெல்விரல் சனகிதன் கற்பெனும் கடலை கீந்தி ஏறுவ(து) எங்ங்னென்(று) ஒருமுகம் கினை" ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு வீற்றிருக்கும் இராவணனை மாருதி காண்கின்றன். இலங்கையில் முதல்நாள் போர் தொடங்குகின்றது. இலங்கையின் மதிலைச் சூழ்ந்து கொண்டு வானரவீரர்கள் போர் தொடங்குகின்றனர். இலங்கையின் நான்கு வாயில்