பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறங்கடந்தவர் செயல் 43 களிலும் இராக்கதசேனை புறப்பட்டு வருகின்றது. நால் வகைச் சேனைகளையும் சுக்கிரீவன் ஒருவனே எதிர்த்து நிற் கின்றன்.வச்சிரமுஷ்டிக்கும் சுக்கிரீவனுக்கும் நடந்தபோரில் வச்சிரமுஷ்டி வானுலகம் சேர்கின்றன். கும்பானுவை இடும்பன் கொல்கின்ருன்; பிரகஸ்தன் உயிரை நளன் செகுத்து விடுகின்றன். சுபாரிசன் ஆவியை அங்கதன் போக்குகின்ருன். அநுமன் துன்முகன் உயிரைக் குடிக் கின்றன். இச்செய்திகளையெல்லாம் ஒற்றர்களால் அறிந்த இராவணன் தானே நேராகப் போர்க்களத்துக்கு வருகின்ருன் கரிய கடல் போன்ற சேனையுடன். இதனைத் தூதுவர்மூலம் இராமன் அறிகின்ருன். இராவணன், அநுமான் இலக்குவன் ஆகியவர்களுடன் போர் செய்த பிறகு இராமனுக்கும் இராவணனுக்கும் கடும் போர் நடை பெறுகின்றது. இராமன் அநுமன் தோளில் அமர்ந்து கொண்டுப் பெரும்போர் புரிகின்ருன். எண்ண ரும்பெரும் தனிவலிச் சிலையைநாண் எறிந்தான்; மண்ணும் வானமும் மற்றைய பிறவுந்தன் வாய்ப்பெய்து உண்ணும் காலத்(து) அவ் உருத்திரன் ஆர்ப்பொத்த(து) ஒதை" (சிலை வில்; வாய்ப்பெய்து . வாயில் போட்டு; ஆர்ப்பு - ஆரவாரம்; ஒதை - ஓசை) எண்ணுதற்கரிய ஒப்பற்ற வில்லின் நாளுெலியை இராமன் எழுப்புகின்ருன். அந்த நாணுெலியின் ஒசை ஊழிக் காலத்தில் இவ்வுலகங்களனைத்தையும் தன் வாயில் போட்டுக்கொண்டு உண்ணும் உருத்திரமூர்த்தியின் ஆர வாரத்தை ஒத்திருக்கின்றது. இராம-இராவணப்போர் மிக மும்முரமாக நடை பெறுகின்றது. அரக்கர்கள் ஏராளமாக மடிகின்றனர். ஒரு சமயத்தில் இராவணனைத் தவிர அனைவருமே மடிந்து 9. முதற்போரி புரி-225