பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறங்கடந்தவர் செயல் 弘3 (அறம்-தருமம், ஆர்ப்ப-ஆர்ப்பரிக்க: நிலம்விரல் கிளைத்திட கால் விரல் நிலத்தைக் கீறிக் கொண்டிருக்க; இறங்கு.கண்ணினன் . கீழே பார்க்கும் கண்ணையுடையவன ய்; எல்-ஒளி; வெறுங்கை-ஆயுதங்களை இழந்த கை; நாற் றினன்.தொங்க விட்டிருப்பவன்; விழுது உடை ஆல்.விழுதையுடைய ஆலமரம்) என்று காட்டுகின்ருன். இராவணன் நின்ற நிலையில் அவனுடைய செருக்கெல்லாம் அழிந்து நிற்கின்றது. நேரா கப் பார்க்கக்கூடக் கூசுகின்ருன்; அவனது பார்வை கீழ் நோக்கியிருக்கின்றது. முகத்தில் ஒளி இல்லை; தலையிலும் மணி முடியில்லாததால் பிரகாசம் இல்லை. பெரிய ஆல மரம் ஒன்று தொங்கும் விழுதுகளுடன் காட்சியளித்தாற் போல், தனது இருபது வெறுங்கைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு தன் உடலை இராமன்முன் காட்டிக் கொண்டு நிற்கின்ருன். மானம் இழந்த நிலையில் இயற்கையிலேயே கருமை நிறம் வாய்ந்த அவன் உடல் இன்னும் கறுத்து விடுகின்றது; மீறி நிற்கும் நாணத்தால் கால்விரல்களால் நிலத்தைக் கீறிக்கொண்டு நிற்கின்ருன் அறநெறிப்படி நில்லாது மனம்போனபடியெல்லாம்போகும் மனிதர்களின் செயல் இப்படித் தான் முடியும்' என்று உலகத்தவர்கள் முழக்கம் செய்து நிற்கின்றனர். இந்நிலையில் அவனே வெல்லுவதும் எளிது; கொல்லு வதும் எளிது. இராமன் அப்படிச் செய்கின்றன? அதுதான் இல்லை. பின் என்ன செய்கின்றன்? இராமன் அவனது தனிமையைக் கண்டு இரக்கம் கொள்கின்ருன். விரைந்து இலங்கை மாநகரிலுள்ள சுற்றத்தாருடன் போய்ச் சேரும் படிக் கூறுகின்ருன் மற்றும், "அறத்தி லைன்றி அமரர்க்கும் அருஞ்சமம் கடத்தல் மறத்தி லைரி (து) என்பது மனத்திடை வலித்தி' 12. முதற்போர்புரி-250