பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை நீதிபதி சு. இரத்தினவேல் பாண்டியன், சென்னை உயர் நீதிமன்றம் விருத்த மெனும் ஒண்பாவிற்கு உயிர் கம்பன்' என்று புலவர்களால் போற்றப்பெறும் கம்பன் மக்கள் கவிஞன். மக்களின் மன எழுச்சிகளேயும் அவர்களின் சுவையறிபாங் கையும் நன்கு அறிந்தவன். ஆகையால் நடையினின்றுயர் நாயகன் கதையை கரத்தமிழில்’ நாடறியச் செய்தனன். அவனியில் அவதார மூர்த்தியாக நடையாடின இராம பிரானை மக்கள் மனத்தில் எழுந்தருளச் செய்தான்; தமிழகத்தில் பக்தி இயக்கத்திற்குப் பின்னர் எழுந்த காஜ்யமாதலால் ஆழ்வார் பாசுரங்களின் தாக்கம் காவியத் தின் சிறப்பைப் பன்மடங்கு உயர்த்தி விடுகின்றது. கடந்த ஐம்பதாண்டு முன்னர் வரையிலும் இக்காவியம் புலவர் களால் மட்டிலும் போற்றப்பெற்று வந்தது. கடந்த அரை நூற்ருண்டுக் காலமாகக் காரைக்குடி கம்பன் அடிப் பொடி அமரர் சா. கணேசன் அவர்களின் அரிய முயற்சியால் கம்பன் பொது மக்களுக்கு நன்கு அறிமுகமான்ை. ஆனந்த விகடனில் பி. ரீ. அவர்கள் எழுதி வந்த கம்ப வித்திரம் பற்றிய கட்டுரைகளும் ரசிகமணி டி. கே. சி. அவர்களின் காவியம்பற்றிய பேச்சும், எழுத்தும், அவர்தம் கம்பராமாயணப் பதிப்பும் பொதுமக்களின் ஆர்வத்தை மேலும் வளர்த்தன. அண்மைக் காலத்தில் மாவட்டத் தோறும் கம்பன் கழகங்கள் தோன்றுவதற்கு முதற்காரண மானவர் முன்னுள் தமிழகத் தலைமை நீதிபதி திரு. மு. மு. இஸ்மாயில் அவர்கள். இக் கழகங்கள் கம்பன் காவியத் தைப் பொது மக்கள் நுகரும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றன. கற்ருேரும் மற்ருேரும் காவியத்தை அது பவித்து மகிழ்கின்றனர். பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் இங்ங்னம் கம்பனை ஆழ்ந்து கற்முேருள் ஒருவர். பல்லாண்டுகளாகப்