பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறங்கடந்தவர் செயல் 4? தருகின்ருன். இவன் அல்லவா தருமமூர்த்தி? இவ்வாறு எதிரிக்குத் துன்பம் வந்தபோதும் அதனைத் தனது வாழ்வுக் குத் துணையாகக் கொள்ளாது எதிரிக்கு மீட்டும் ஒரு சந்தர்ப் பத்தைத் தருவதல்ல வாபேராண்மை? இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த இராவணன், புய பலத்தாலும் வரபலத்தாலும் பெருமை வாய்ந்த இலங்கை வேந்தன், அழியக் காரணம் என்ன? சாதாரண மனிதர் இருவரையும் வானரர்களையும் எதிர்த்து நிற்க முடியாமல் போனதன் காரணம்தான் என்ன? பாரக் கிரமங்களைப் பல படைத்திருந்தும் காமம் ஒன்று நெஞ்சிலுள் நுழைந்து அவைகளையெல்லாம் தேய்த்து விடுகின்றது. இந்தக் குற்றம் அவனிடத்தில் இல்லாதிருந்தால் அவன் எவ்வளவுமேலான வணுயிருந் திருப்பான்! எல்லா மேன்மைகளும் பொருந் திருந்தும் இந்த ஒரு குற்றம் அவனை எவ்வளவு சிறியவன் ஆக்கிவிடுகின்றது! இறுதியில் அழிவையன்ருே அவனுக்குத் தந்து விடுகின்றது? நமது ஆசையை அடக்கும்போது நாம் அமரனகிருேம் என்றும் நாம் ஆசைக்கு உட்படும்போது அசுரன் ஆகின்ருேம் என்றும் ஆன்ருேர் கூறும் உண்மைக்கு இராவணதத்துவம் ஒர் எடுத்துக்காட்டாக இருக்கின்ற தல்லவா? தருமவழியில் ஒழுகாவிட்டால் 'இராவணன் நிலைதான் நமக்கும்!” என்ற உண்மையை சாதாரண மக்களும் அறிந்துகொள்ளும்படி இராவணன் கதை விளக்கி நிற்கின்றதன்ருே?