பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனில் குழந்தையின்பம்: குழந்தை இன்பத்தைப்பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை; கூருத இலக்கியங்களே இல்லை. உலக இலக்கி யங்கள் அனைத்திலும் இதன் சிறப்பு, பல படியாகப் பெருமையுடன் பேசப்படுகின்றது. அறிவு நிலை முதிர்ச்சிப் பெழுத விலங்கினங்களும் பறவையினங்களும் ஏனைய சிற்றறிவுயிர்களும் தம் வழித்தோன்றல்களுடன் கொஞ்சிக் களிக்கின்றன. மனித இனத்திலும் எல்லா நிலையி லுள்ள மக்களும் குழந்தையிடம் பேரன்பு காட்டிப் பெரு மகிழ்வு எய்துகின்றனர். குழந்தைப் பேறு இல்லா விட்டால் அது வாழ்வில் ஒரு பெருங்குறை என்றும் கருதப் பெறுகின்றது. தமிழர்களின் வாழ்க்கைக் கலையாக மிளிரும் திருக்குறளில், மங்கலம் என்ப மனமாட்சி; மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு." என்று மக்கட் பேற்றைச் சிறப்பிக்கின்ருர் வள்ளுவப் பெருந்தகை. தமிழ்நாடு தீபாவளி மலர்-1956இல் வெளிவந்தது. 1. குறள்-60