பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் குழந்தையின்பம் 49 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்? என்று குழந்தைச் செல்வத்தைப் பாராட்டிப் பேசுகின்ருர். பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட்ட பாரதியாரும் கண்ண்ம்மா-என் குழந்தை' என்ற தலைப்பில் எவர்மனத்தையும் எளிதில் கொள்ளை கொள்ளக்கூடிய இன்னிசைக் கவிதையைப் பாடியுள்ளார். தமிழ்மொழில் குழந்திையின்பத்தைக் கூறும் இதற்கு ஈடான வேறு கவிதையே இல்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் கள்வெறி கொள்ளு த்டீ! உன்னைத் தழுவிடிலோ-கண்ணம்மா உன்மத்த மாகு தடீ! மார்பி லணிவதற்கே-உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ? சீர்பெற்று வாழ்வ தற்கே-உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ? என்பன போன்ற பாடற்பகுதிகள் பாடப்பாடத் தெவிட் டாத இன்பந் தருபவை. கடவுளைப்பற்றி உருகி உருகிப் பாடிப் பிறப்பையே வேருடன் அறுக்கவேண்டும் என்று முயலும் சமயகுரவர் களும் ஆண்டவனேக் குழந்தையாகப் பாவித்துக் கொண்டு அற்புதச் சொல்லோ வியங்களை அருளியுள்ளனர். பெரி யாழ்வார் கண்ணன் திருவவதாரச் சிறப்புப் பற்றிப் பாடியுள்ள பாடல்களே இவற்றிற்கு எழுத்துக்காட்டுக்க ளாகக் கொள்ளலாம். இவ்வாறு ஆழ்வார் மணிகள் காலத்தில் அரும்பிய பிள்ளைப்பாட்டுகளே பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ்' என்ற தனிப்பிரபந்த வகையாக வடி வெடுக்கத் துணைசெய்தன. குழந்தையின்பத்தை உச்ச் 2. குறன் - 65 , க.-4