பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} கம்பனில் மக்கள் குரல் 5 நிலையில் காணக்கூடிய பருவத்தைத் தேர்ந்தெடுத்து அப்பருவத்தைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு பாடும் வழக்கமும் ஏற்பட்டது. பிள்ளைப் பாட்டே தென்னிதின் கிளப்பின் மூன்று முதலா மூவேழ் அளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் கிலேயே’ என்ற இலக்கணமும் வகுக்கப்பெற்றது. திருமால் முருகன், அம்பிகை முதலிய கடவுளர்களைக் குழந்தையாக உருவகித்துப் பாடியுள்ள பிள்ளைத் தமிழ் நூல்கள் தமிழ் இலக்கியத்தின் கருவூலங்கள். காப்பியத்திலும் குழந்தை பின்பம் வெகுவாகச் சிறப்பித்துப் பேசப்படும். பெருங் காப்பியத்திற்கு இலக்கணம் கூறும் தண்டியாரும். தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்." என்ற கூறினே இன்றியமையாத காப்பிய உறுப்பாகக் கூறிச் சென்ருர். இங்ங்னம் பல்வேறு துறைகளிலும் பல்வேறு நிலையிலு முள்ள கவிஞர்களும் சிறப்பாகக் கொண்டுள்ள குழந்தை பின்பத்தைக் கம்பன் தனது காவியமாளிகையில் எங்கும் காட்டவில்லை. காட்டவேண்டிய வாய்ப்புகள் நிறைய இருத்தும் காட்டவில்லை. இராம காதையில் மனிதர் உலகம், குரக்கர் உலகம், அரக்கர் உலகம் என்ற மூன்று தனிப்பட்ட உலகங்கள் காட்டப்பெறுகின்றன. மூன்றிலும் தனித்தனிப் பேரரசுகள் ஏற்பட்டு கோலோச்சிய செய்திகள் கூறப்பெறுகின்றன. மூன்றிலும் ஆண்ட அரசர்களுக்குக் குழந்தைப் பேறு ஏற்படத்தான் செய்தது. அச்சந்தர்ப்பங்களே யொட்டிக் கம்பன் குழந்தையின்பத் தைப்பற்றிப் பல பாடல்களைப் பாடியிருந்திருக்கலாம். 3. பன்னிருபட்டியல். சி. தண்டியலங் காரம்.