பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் குழந்தையின்பம் 51 இவ்வளவுகூட ஏன் யோசிக்க வேண்டும்? அரக்கர் உலகம், குரக்கர் உலகம் ஆகிய இரண்டையும் கற்பனை யுலகங்கள் என்று கொண்டாலும் மனித உலகையாவது உண்மை யான உலகம் என்று கொள்ளலாமன்ருே? மனித உலகை ஆண்ட தசரதனுக்கும் பன்னெடுங்காலமாகக் குழந்தைப் பேறு இல்லா திருந்தது, அறுபதியிைரம் மங்கையரை மணந்து அறுபதியிைரம் ஆண்டுகள் அறநெறி வழுவாது செங்கோலோங்கிய மன்னனுக்குக் குழந்தைப் பேறு ஏற்பட்ட பொழுது. அந்த இன்பத்தை எத்தனையோ விதமாகக் காட்டியிருந்திருக்கலாம். இக்காலத்தில் பெரிய செல்வந்தர் வீட்டில் பல ஆண்டுகள் மக்கட்பேறு இல்லாது அவ்வீட்டு மங்கை கருவுற்ருல், கருவுயிர்ப்பதற்கு முன் சில திங்களிலிருந்தே பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெறத் தொடங்கி விடுகின்றன. குழந்தை பிறந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் அக்குடும்பம் மிகக் குதூகலமாக இருப்பதைக் காண்கின்ருேம். குழந்தைக்கு எண்ணற்ற விளையாட்டுச் சாமான்கள், வினேதமான ஆடையணிகள் முதலியவைகள் வாங்கித் தரப்பெறுகின்றன. உறவினர் முதலியோர் வந்து வந்து போவர். இரவலர்க்கீதல் போன்ற செயல்கள் அடிக்கடி நடை பெறும்; ஏழைகளுக்கு உண்டி வழங்குதல் போன்றவை அடிக்கடி நிகழும், இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள்! தசரதனுக்குக் குழந்தைப் பேறு ஏற்பட்ட நிகழ்ச்சி மிகச் சாதரணமாகத்தான் காட்டப்பெறு கின்றது. ஒரு பகல் உலகெலாம் உதரத் துட்பொதிந்து அருமறைக்கு உணர்வரும் அவனே அஞ்சனக் கருமுகிற் கொழுந்தெழில் காட்டும் சோதியைத் திருவுறப் பயந்தனள் திறங்கொளி கோசலை." (உதாம்-வயிறு; அஞ்சனம்-மை! என்ற பாட்டில் கோசலே இராமனேப் புரவந்த செய்தி வருகின்றது. 5. இருவவதாரம்-108