பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் குழந்தையின்பம் 53 காவியம் மிகச் சுருக்கமாகப் பாடப்பெற்றிருந்தால் இத் தகைய நிகழ்ச்சிகளைக் காட்டுவதற்கு இடம் இல்லை என்று கருதலாம். காவியமோ பத்தாயிரம் பாட்டுகளுக்கு மேல் வளர்ந்து செல்லுகின்றது. அதில் இந்நிகழ்ச்சியை விரித் துரைக்க இடம் இல்லை என்று கருதுதல் தவறு. யுத்த காண்டத்தில் அளவுக்கு விஞ்சிய பாடல்களைப் பாடிய கவிஞன் தக்க சூழ்நிலையைக் கவினுறப் பயன்படுத்திக் கொள்ளாததற்கு யாதாயினும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும் என்று எண்ண வேண்டியிருக்கிறதன்ருே? குழந்தையின்பத்தைச் சிறிதும் கூருத கவிஞன் மைந்தர்கள் இறப்பைக் குறித்துப் பாடுங்கால் உள்ளத்தை யெல்லாம் கொள்ளை கொள்ளக் கூடிய அற்புதப் பாடல் களை அள்ளி வீசுகின்றன். அட்சயகுமரன், அதிகாயன்iஆகிய மைந்தர்கள் இறந்தபோது இராவணனுக்கு உண்டான துக்கத்தைக் கவிஞன் சாதாரணமாகத்தான் காட்டு கின்ருன். அதிகாயன் இறந்தபோதுகூட இராவணன் வாய்விட்டுப் புலம்பும் நிலையைக் கவினுறக் காட்டவில்லை. மைந்தன் இழப்பைக் குறித்து இராவணன் நகும்; அழும்: முனியும்; நாணும்' என்றும், புண்ணிடை எரிபுக்கென்ன மானத்தாற் புழுங்கி நையும்” என்றும் மட்டிலுந்தான் கூறுகின்ருன். ஆனால், அதிகாயன் இறப்பைக் குறித்து தானிய மாலினிதான் அதிகமாகப் புலம்புகின்ருள். இந்திரற்குந் தோலாத கன்மகனை ஈன்ருள் என்று அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் மந்தரத்தோள் என்மகனை மாட்டா மனிதன்றன் உந்துசிலைப் பகழிக்கு உண்ணக் கொடுத்தேனே? எனற பாடல் அவள் புலம்பலின் உச்சநிலையைக் காட்டு கின்றது. 9. அதிகாயன் வதைச270