பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4. கம்பனில் மக்கள் குரல் மேகநாதன் இறந்துபடும்போதுதான் துக்கத்தின் கொடுமுடிகள் எல்லாம் காட்டப்பெறுகின்றன. இராவ னனின் புலம்பவிலும் மண்டோதரியின் புலம்பலிலும் இத் தகைய கொடுமுடிகளைக் காணலாம். மூன்று உலகங்களையும் வென்று மும்மூர்த்திகளையும் ஏவல் கொண்ட இராவணன் புத்திர சோகத்தால் வாய்விட்டுப் புலம்புகின்ருன் வீரவுணர்ச்சியும் சோக உணர்ச்சியும் மாறி மாறி வெளி வருகின்றன. கிலேயுமா திரத்து கின்ற யானையும் நெற்றிக் கண்ணன் மலையுமோ யெளிய வோநான் பறித்தற்கு மறுவின் மைந்தன் தலையுமார் உயிரும் கொண்டார் அவருட லோடுந் தங்கப் புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும்: என்ற பாட்டில் இவற்றைக் காணலாம். தன்னுடைய பண்டைப் பெருமைகள் எல்லாம் ஒவ்வொன்ருக அவன் தினேவிற்கு வருகின்றன. அவற்றுடன் தன்னுடைய அன் றைய நிலையையும் வைத்து எண்ணச் செய்கின்றது அவன் மனம். நினைத்ததை நினைத்தபடி யெல்லாம் நிறைவேற்றி வாழ்ந்த அவன் பெண்ணுெருத்தியின்பொருட்டு அனைத் தையும் இழந்து, மானம், வீரம் முதலிய உயர் பண்புகளை யும் போக்கி, நிற்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்று ஏங்குகின்ருன். அது மட்டுமா? தனக்கு எள்ளையும் நீரையும் கொண்டு மைந்தன் செய்ய வேண்டிய நீர்க்கடன்களைத் தான் அவனுக்குச் செய்யும் நிலை வந்து விட்டதே என்று உதிரக் கண்ணிர் வடித்துப் புலம்புகின்ருன், 10, இராவணன் சோஆம்: