பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் குழந்தையின்பம் §§ சினத்தொடும் கொற்றம் முற்ற இந்திரன் செல்வம் மேவ நினைத்தது முடித்து கின்றேன் நேரிழை ஒருத்தி ரோல் எனக்குநீ செய்யத் தக்க கடன்ளலாம் ஏங்கி ஏங்கி உனக்குநான் செய்வ தானேன் என்னின்யார் உலகத்து உள்ளார்: என்ற பாடலில் இராவணன் அடைந்த துக்கத்தின் கொடு முடியைக் காணலாம். பாடலின் இறுதி இரண்டடிகளைப் படிக்கும்பொழுது நமக்கே நெஞ்சு வெடித்து விடும் போலாகி விடுகின்றது. மைந்தன் போரில் மடிந்ததைக் குறித்து மண்டோதரி புலம்பும் பாடல்களில் சோகத்துடன் சின்னஞ்சிறு வயதில் தாய் குழந்தையை வளர்த்த அருமையும் வினையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கொப்ப அக் குழந்தை தன் தளர்நடைப் பருவத்திலேயே செய்த அருஞ் செயல்களும் காட்டப்பெறுகின்றன. கலையினல் திங்கள் போல வளர்கின்ற காலத் தேயுன் சிலையிஞல் அளியை வெல்லக் காண்பதோர் தவமும் செய்தேன் தலையிலா வாக்கைக் காண எத்தவம் செய்தேன் அந்தோ நிலையிலா வாழ்வை இன்னும் நினைவனே நினைவி லாதேன்? |வாக்கு-உடல்) 11. இராவணன் சோகம்-89