பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் எழுதிய பதினெரு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பேராசிரியர் பல கோணங்களில் கம்பனைத் துய்த்தமையைக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன. கம்பனில் மக்கள் குரல் என்ற முதற் கட்டுரையில் புறநானூற்றுக் காலம் முதல் நடைபெற்று வந்த கோட்ைசி முறை மாறிக் கம்பன் காலத்தில் (பத்தாம் நூற்ருண்டு) குடியாட்சி முறைக்கு வித்திட்ட நயத்தைக் காட்டுகின்ருர். மக்களுக்கு உயிராக இருந்த அரசன் அவர்கட்கு உடலாகின்ருன். மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னவன்' என்ருகின்றன் (பக். 2). இக்கட்டுரையில் பேராசிரியர் நான்கு அரசுகளைக் காட்டுவதும், மக்கள் அந்த அரசுகளைப்பற்றித் திறனாய் வதும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. காவியத் தம்பி’ என்ற கட்டுரை இளையபெருமாளைப் பற்றியது; தம்பி யுடையான் பகையஞ்சான்’ என்ற உண்மையைப் பறை சாற்றுகின்றது (பக். 32). அறங்கடந்தவர் செயல்' என்ற கட்டுரை ஆணவத்தின் திருவிளையாடல்கள் ஒரு நாள் அடங்கியே தீரும் என்ற உண்மையை எடுத்துக் காட்டுவ தாக அமைகின்றது, கம்பனில் குழந்தை இன்பம் என்ற கட்டுரை கம்பன் குழந்தையின்பத்தைப் பற்றி ஏன் பாட வில்லை, சரியான சந்தர்ப்பம் இருந்தும் பாடாது விட்டது ஏன்? என்ற விைைவ எழுப்பி அதற்கு விடையும் தரும் பாங்கு நம் சிந்தனைக்கு விருந்தாகின்றது. 'மலைக் காட்சி (ஆருவது கட்டுரை) குறிஞ்சி நிலக் காட்சிகளை அற்புதமாகச் சித்திரித்துக் காட்டுகின்றது, இங்குக் கம்பனின் தெய்மாக் கவியின் மாட்சியைக் காண முடிகின்றது. இஃது தான் இராமன் திருமணத்திற்குப் பின்னர் காடுரை வாழ்க்கையின் தொடக்கத்தில் நுகர்ந்த தேனிலவுப் (Honey moon) பகுதி! அதன் பிறகு இராமன் பல் வேறு துன்பங்கட்கு ஆளாகின்ருன் என்பதை நாம் அறிவோம். விளையும் பயிர் என்ற கட்டுரை மேகநாதனின் திறமையை மேம்பட எடுத்துரைக்கின்றது. சிறை வைத்த