பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கம்பனில் மக்கள் குரல் தானரிச் சதங்கை பார்ப்பத் தவழ்கின்ற பருவங் தன்னில் கோளரி இரண்டு பற்றிக் கொணர்ந்தன; கொணர்ந்து கோபம் மூளுறப் பொருத்தி மாட மூன்றிலின் முறையி ளுேடு னேரு விளையாட்டு இன்னம் காண்பகுே விதியி லாதேன்? (கோளரி.சிங்கம்) அம்புலி அம்ம வாவென்று அழைத்தலும் அவிர்வெண் திங்கள் இம்பர்வங் தானே அஞ்சல்' எனஇரு கரத்தின் ஏக்தி வம்புறு மறுவைப் பற்றி முயல்என வாங்கும் வண்ணம் எம்பெருங்களிறுே கான வேசற்றே எழுந்தி ராயோ?* அதுமட்டுமா? எங்கெங்கு இறப்புகளினல் புலம்பல்கள் நடை பெறுகின்றனவோ அங்கங்கெல்லாம் சோகத்தின் உச்சநிலையைக் காணலாம். இராவணன் இறந்தபொழுது வீடணன், மண்டோதரி ஆகியோர் புலம்புவதாகவுள்ள பாடல்களில் கம்பனின் சோகத் துடிப்புதான் காணப்படு கின்றது என்று தெரிந்து கொள்ளலாம். கம்பனுக்கு இவ்வளவு சோகம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பது புலப்படவில்லை. கம்பனுடைய உண்மையான வரலாறுபற்றிய குறிப்புகள் ஒன்றும் சரி யாகக் கிடைக்கவில்லை. தனிப்பாடல திரட்டு, தமிழ்க் நாவலர் சரிதை, புலவர் புராணம் ஆகிய நூல்களில் காணப்பெறும் குறிப்புகளனைத்தும் நம்பத் தக்கனவாக 12. இராவணன் சோகம் 47, 49, 59