பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் குழந்தையின்பம் გ? இல்லை. அம்பிகாபதியின் வரலாற்றை உண்மையைாகக் கொண்டால் கம்பனுடைய துக்கத்திற்கு ஒருவாறு.காரணம் கற்பிக்கலாம். அம்பிகாபதி சோழன் மகளைக் காதலித்த தாகவும், அதனால் அவனுக்கு மரணதண்டனை நேர்ந்ததாக வும் வரலாறு ஒன்று வழங்கி வருவதை யாவரும் அறிவர். அம்பிகாபதி இறந்த பிறகு கம்பன் இராமயணத்தைப் பாடியிருக்க வேண்டும் என்றும், அப்படிப் பாடியதனுல்தான் தக்க சூழ்நிலையிருந்தும் தள்னுடைய ஒரே மைந்தன் இறந்த துக்கத்தின் மேலீட்டால் குழந்தையின்பத்தைப்பற்றி எங்குமே பாடவில்லை என்றும், ஆனால் சோகவுணர்ச்சியைக் காட்ட வேண்டிய இடங்களில் அது மிகச் சிறப்பாகக் காட்டப் பெறுகின்றது என்றும் ஊகம் செய்ய முடிகின்றது. அந்த ஊகத்தை உறுதிப்படுத்த வேண்டுமானல், கம்பனு டைய உண்மையான வரலாறு தக்க சான்றுகளைக் கொண்டு எழுதப்பெறல் வேண்டும். அத்துறையில் பணியாற்ற வேண்டியது இன்றைய தமிழ் அறிஞர்களின் கடமையாகும்.