பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அறிமுகம் அகலிகையைக் கெளதம முனிவரிடம் சேர்ப்பித்து விட்டு இராம இலக்குமணர்களும் விசுவாமித் திர முனி வரும் மிதிலே நகரை நோக்கி வருகின்றனர். அங்கு பலவிதமான காட்சிகளைக் கண்டு களிக்கின்றனர். சண்க மகாராசனின் அரண்மனைக்குள் புகுந்து அங்குள்ள பல காட்சிகளைக் கண்டு களித்துக் கொண்டு கன்னிமாடத் தருகே வரும்போது மேன் மாடத்தில் நின்று கொண்டிருந்த சீதையை இராமன் பார்க்க நேரிடுகின்றது, சீதையும் இராமனைப் பார்க்கின்ருள். இதனைக் கம்பன், கண்ணுெடு கண்ணிணைக் கவ்வி ஒன்றையொன்(று) உண்ணவும் கிலேபெரு(து) உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினன்; அவளும் நோக்கினுள்." இணை-இரண்டு; கவ்வி-பற்றி; உண்ணவும். கவர்ந்து அநுபவிக்கவும்; ஒன்றி--ஒற்றுமைப் பட! 1. மிதிலைக் காட்சி-33