பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் குழந்தையின்பம் 数弱 என்று காட்டுகின்றன். முன்பின் ஒருவரையொருவர் அறியாதவர்களே ஊழ் ஒன்று சேர்த்து வைக்கின்றது; அறிமுகம் ஆகின்றனர். ஆனால், ஒருவரையொருவர் பார்க்க நேரிடும்போது கூட ஒருவரையொருவர் இன்னர் என்று அறிந்து கொள்ள இயலவில்லை. இருந்தாலும் கண்ணின் பார்வையாகிய கயிற்றினல் பிணிக்கப்பட்டவர் களாகி, வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும் மாறி மாறி ஒருவர் உள்ளத்தில் மற்ருெருவர் படிகின்றனர். உடல் இரண்டு உயிர் ஒன்று என்று சொல்லும்படியாக ஆய்விடுகின்றனர். இரவு வருகின்றது; முழு மதியமும் உதயமாகின்றது. அக்காட்சி பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் நிறைந்த பொற்கலசம் எழுவதைப் போலிருக்கின்றது. நீலமேக சாமள வண்ணனை திருமாலின் வயிற்றில் ஒரு தாமரை பூத்ததைக் கண்டு கருங்கடலும் ஒரு தாமரை மலரைத் தன்னிடம் தோற்றுவித்ததோ என்றுகூட ஐயுறும்படி இருந்தது சந்திரனுடைய தோற்றம். அப்படித் தோன் றின சந்திரனுடைய கதிர்கள். முழுமதியம் தோன்றும் நாள் பிரிந்து கிடக்கும் காதலர்களுக்குக் கொடிய கால மல்லவா? நிலாக் கதிர்கள் சீதையின்மீது படுதலால் அவள் உடல் வெம்பி மனந் தளர்ந்து செந்தாமரை மலராலான படுக்கையில் புரண்டு புரண்டு கிடக்கின்ருள். அவளுடைய விரக தாபத் தால் தாமரை மலர்கள் கூட சாம்பிப் பொலிவழிந்து விடுகின்றன. தோழிமார்கள் சீதைக்குச் செய்யும் பணி விடைகள் யாவும் அவளுடைய விரக தாபத்தை மிகுவிக் கின்றனவேயன்றித் தணித்தபாடில்லை. காம நோயைத் தீர்க்கக்கூடிய மருந்துகூட உலகத்திலிருக்கின்றதா? விசுவாமித் திரரையும் இராம இலட்சுமணரையும் சனகன் வரவேற்று அவர்களை ஒரு மாளிகையில் தங்க வைக்கின்றன். அவர்கள் மூவரும் மகிழ்ச்சியுடன் அங்குத் தங்கியிருக்கின்றனர். அவ்வமயம்,