பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# கம்பனில் மக்கள் குரல்

  • மாதவம் யாவுமோர் செய்கை கொண்டு நடந்தென,"

அகலிகை பெற்றெடுத்த சதானந்த முனிவர் வந்து அவர் களைக் காண்கின்ருர். முதலில் இராமன் வந்து அவரை வணங்க அவனுக்கு முனிவர் அநேக ஆசி மொழிகளை அருளுகின்ருர்; பிறகு விசுவாமித் திரரருகே அமர்கின்ருர். தாங்கள் இவ்விடம் எழுந்தருள இம் மிதிலாநகரம் செய்துள்ள புண்ணியந்தான் யாதோ?’ என்று விசுவாமித் திரரை நோக்கிக் கூறுகின்ருர் சதாநந்த முனிவர். வடித்த மாதவ கேட்டிஇவ் வள்ளல்தான் இடித்த வெம்குரல் தாடகை வாக்கையும் அடுத்துனன் வேள்வியும் கின்அன்னை சாபமும் முடித்துஎன் நெஞ்சத்து இடர்முடித் தான்" |வடித்த.தெளிந்து எடுக்கப்பட்ட, கேட்டி-கேட் பாய், இடித் த.இ.டியை யொத்த; இடர். துயரம்} என்று இராமன் தாடகையைக் கொன்று தனது வேள் வியை வெற்றிகரமாக முடிக்க உதவினதையும், சதாநந்த ரது அன்னேயாகிய அகலிகையின் சாபத்தைத் தீர்த்ததை யும் கூறி இராமனது சிறப்பையும் அவனது தெய்விகத் தன்மையையும் முனிவருக்குக் குறிப்பிடுகின்ருர். கேட்டுக் கொண்டிருந்த சதாநந்தர், உமது அருள் இருக்கும் வரை யில் இவ்வீரனுக்கு அரிதாகிய காரியம் யாதேனும் உண்டோ? என விளம்புகின்ருர். பிறகு இராமனை நோக்கிச் சதாநந்தர் ஆதியில் ஒரு பேரரசனக இருந்து இன்று ஒரு மாமுனிவராகவிருக்கும் விசுவாமித்திரருடைய வரலாற்றை விரிவாகக் கூறி 2. மிதிகக் காட்சி-ச 壽 § ♔-88