பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் குழங்தையின்பம் 61 அவருடைய சிறப்பையெல்லாம் இராமன் அறியும்படி செய்கின்ருர். இவ்வாறு சனகனுடைய மாளிகையில் சதாநந்த முனிவர் இராமனது சிறப்பையறியவும் இராமன் விசுவாமித்திரருடைய பெருமையை அறியவும் ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுகின்றது. பிறகு சதாநந்தர் தன் இருப்பிடம் செல்கின்ருர். இரவு வருகின்றது; இலக்குவனும் விசுவாமித்திரரும் அவரவருடைய படுக்கையிடங்களை அடைகின்றனர். இராமனுக்கு இரவும், நிலாவும், தனிமையும் சீதையின் நினைவை ஊட்டுகின்றன. அவன் மனக்கண்முன் சீதையின் உருவம் தோன்றுகின்றது. வானத்திலுள்ள மின்னல்தான் பெண் உருக்கொண்டு வந்திருக்கின்றதோ? என்று ஏங்கு கின்றன். ஊழிக்காலம் கடந்தது போல ஒருவாறு அவ்விரவு கழிகின்றது. பொழுது புலர்கின்றது; இராமன் துயில் எழுகின்ருன். காலைக் கடன்களையும் அன்ருடம் செய்ய வேண்டிய ஏனைய கடமைகளையும் முடித்துக் கொண்டு விசுவாமித்திர முனிவரை வணங்கி அவருடனும் மனத்துக்கினிய தம்பி யோடும் சனக மகாராசனது பெரு வேள்விச் சாலையை அடைகின்ருன். சனக மகாராசனும் வேத விதிப்படி வேள்வி காரியங்களையெல்லாம் முடித்துவிட்டு திருவோ லக்க மண்டபத்துக்கு வந்து மாதவ முனிவராகிய விசுவா மித்திரரருகில் அமர்கின்ருன்; இராம-இலட்சுமணரும் முனிவர் அருகில் அமர்ந்திருக்கின்றனர். சனக மகா ராசன், - இருந்தகுலக் குமரர்தமை இருகண்ணின் முகத்தழகு பருக நோக்கி х அருந்தவனை அடிவணங்கி யார்?இவரை உரைத்திடுமின் அடிகள் என்னக்' கேட்கின்ருன் விசுவாமித்திரரை நோக்கி, நீண்ட நாடி 4. மிதிலேக் காட்சி-157