பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கம்பனில் மக்கள் குரல் களாகத் தன குலக் கொழுந்தாகிய சீதைக்கு ஏற்ற கணவன் கிடைக்கப் பெறவில்லையே என்று ஏங்கிக் கவலை யுற்றுக் கிடக்கும் சனக மகாராசனத் தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அரச குமாரர்களின் முகத்தழகு ஈர்த்து விடுகின்றது; அவ்வழகினையெல்லாம் பருகி விடுவான் போல அவ்வளவு ஆவலாகப் பார்க்கின்ருன் அரசன். இவர்கள் யாவர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உந்துகின்றது; மாமுனிவர் திருவடிகளில் வீழ்ந்து தண்டனிட்டு அவர்களே அறிமுகம் செய்யுமாறு வேண்டுகின்ருன். சனகனுடைய உட்கருத்தையெல்லாம் விசுவாமித்திரர் நன்கு அறிந்தவரல்லவா? பன்னெடு நாட்களாக அவன் கொண்டுள்ள கவலையை நன்கு அறிந்திருந்தார் அவர். விருந்தினர்கள் நின்னுடைய வேள்விகா ணிையவந்தார்; வில்லும் காண்பார்; பெருந்தகைமைத் தயரதன்தன் புதல்வர் என அவர்தகைமை பேசல் உற்ருன்." (வேள்வி-யாகம்; காணிய.காண்பதற்கு; பெருந் தகைமை-கம்பீரமான சிறந்த குணம்; தகைமை.மகிமை; இவ்வாறு இராம லட்சுமணர்களே அறிமுகம் செய்து வைக் கின்ருர் விசுவாமித்திரர் இவர்கள் உனது விருந்தினர்கள்’ தாம்; உன்னுடைய சிறந்த யாகத்தைக் காண்பதற்காகத் தான் வந்திருக்கின்றனர்; இவர்கள் தசரதச் சக்கர வர்த்தியின் புதல்வர்கள்’ என்று கூறுகின்ருர். பன்னெடு நாட்களாகச் சீதையின் மணத்திற்கு ஈடாக வைக்கப் பெற்றிருக்கும், எந்த அரசகுமாரர்களாலும் எடுத்து நாண் ஏற்ற முடியாத, சிவதனுசை அறிந்துள்ள முனிவர்,

  • வில்லும் காண்பார்!" என்று குறிப்பாக அறிவித்து, அவன் கொண்டிருக்கும்

5. டிெ-157 கி, டிெ-157