பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் குழந்தையின்பம் 6# மனக்குறை நீங்குவதற்குக் காலம் நெருங்கி விட்டது என்பதையும் குறிப்பாகத் தெரிவிக்கின்ருர். பிறகு அக் குமாரர்களுடைய குலமுறையையெல்லாம் விரிவாக உரைக் கின்ருர். நீண்ட நாட்களாக மகப்பேறு இல்லாது வருந்திய தசரதனுக்கு மகப்பேறு உண்டான வரலாற்றையெல்லாம் கூறுகின்ருர். பிறகு, திறையோடும் அரசிறைஞ்சும் செறிகழற்கால் தசரதனும் பொறையோடும் தொடர்மனத்தான் புதல்வரெனும் பெயரேகாண்; உறையோடும் நெடுவேலாய உபநயன விதிமுடித்து மறையோடு வித்துஇவரை வளர்த்தானும் வசிட்டன்காண்: (திரையோடு. கம்பங்களுடன்; கழல், வீரக்கழல்; மறை ஒடுவித்து-வேதங்களை வி ைர வில் பயிலும்படி செய்து என்று இராமனை அறிமுகம் செய்து வைக்கின்ருர். தசரதனுக்கும் புத்திரன் என்ற முறையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை; இவனுக்கு ஞானக்கண் திறந்து வேதங்களே யெல்லாம் பயிற்றுவித்து இவனே ஒருசிறந்த மனிதனுக ஆக்கிய தெல்லாம் வசிட்டனே என்று. இராமனுடைய இல்வி, திறமை முதலியவற்றை யெல்லாம் தெரிவிக் கின்ருர் முனிவர். ஆசிரியன்தான் உயிரை வளர்க்கும் தந்தை என்பதையும் குறிப்பிட்டுவிடுகின்ருர். இராமனுடைய வீரத்தையும் வில்லாற்றலையும் தெரி து விரும்பிய முனிவர் தான் செய்த வேள்வியைக் காத்தற்பொருட்டு இராமலட்சுமணர்களைக் கூட்டிச் சென்ற 7. குலமுறை கிளத்து-24