பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi காதல் என்ற கட்டுரையில் சீதையின் உருவத்தை இராவணன் சிறையில் வைத்ததையும் (ஆரணி, மாரீசன் வதை-83), பல நூறு பாடல்கட்குப் பின்னர் அந்த உருவம் சிறைவீடு பெற்றதையும் (யுத்த இராவணன் வதை.239) காட்டும் பாங்கு பேராசிரியரின் நுண்மாண் நுழை புலத்தை நுட்பமாகக் காட்டுகின்றது. கவி நாயகன் (9-வது கட்டுரை) என்பதில் கவிநாயகன்' என்ற தொடர் கம்பனையும் அநுமனேயும் சுட்டுவதை (பக்.108) எடுத்துக் காட்டி, இராகவன் புகழினைச் செவிக் குத் தேளுக இனிக்கும் வண்ணம் திருத்திய பெருமையை இரு கவிநாயகர்களிடத்திலும் கண்டுகளிக்கலாம். வான் மீகத்திலுள்ள வரலாறுகளில் சிலவற்றைத் திருத்தித் தமிழர்களின் மரபுக்கும் நாகரிகத்திற்கும் ஏற்றவாறு இராமகாதையை அமைத்த பெருமை கவிநாயகனுகிய கம்பனுக்கு உரியது. இராமனது காடுறை வாழ்க்கையின் வரலாற்றில் நேர்ந்த சில பேராபத்துகளை நீக்கி அதனைச் செம்மையாக மாண்புறுத்திய பெருமை கவி நாயகராகிய வாயுபுத் திரனைச் சாரும்’ (பக்.97) என்று சுட்டியுரைத்து இராமனது வரலாற்றில் எழுந்த கோணல் கள் எவை என்பதையும், அவற்றை நிமிர்த்தின அநுமனின் திறத்தினையும் விளக்கும் பாங்கு அற்புதமாக அமைந் துள்ளது. கம்பன் காட்டும் மேழிச் செல்வம் என்ற கட்டுரையில், இக்காலத்திற்கும் பொருந்துகின்ற தன்மையைக் காண்கின் ருேம், உணவு பற்ருக்குறை பற்றிய காரணங்களைச் சுட்டியுரைத்து "வன மகோத்ஸ்வம்”, “ஏர்முனைவிழா போன்ற விழாக்களைக் கொண்டாடுவதால் யாதொரு பயனும் விளையப் போவதில்லை.வாணிகத்திற்கும் பொருத்த மான விளம்பரத் திட்டங்களை உணவுப் பெருக்கத்திற்காக அரசினர் மேற்கொள்வது வருத்தத்தை விளைவிக்கின்றது” என்ற புரட்சிகரமான கருத்து ஆழ்ந்து சிந்திக்கதக்கது. (புக், 105). (ஏரெழுபது) கம்பனுடைய தா? அல்லது பிற்