பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கம்பனில் மக்கள் குரல் சரிதான்!” என்று தனது சடை முடியை அசைத்து இராம இடைய முகத்தைப் பார்க்கின்ருர். அப்பார்வையில் பேசாத பேச்சாக இவ்வில்லை நீ முறிப்பாயாக!' என்ற ஆணயைக் காண்கிருன் இராமன். வனேந்தனையை திருமேனி ள்ளலும் அம் மாதவத்தான் கினைந்தவெலாம் கினைந்து அந்த நெடுஞ்சிலையை நோக்கினன்' |வனைந்தனைய-ஒவியத்தில் எழுதியது போன்ற; மாதவத்தோன்.விசுவாமித்திரன்! வில்லைப் பார்க்கும் போதே அதை எந்த இடத்தில் எப்படிப் பிடித்து ஒடிக்கலாம் என்ற திட்டங்களேயெல்லாம் போட்டு விடுகின்ருன் இராமன். வில்லின் பக்கத்தில் எழுந்து செல் லும்போதே வில் அழிந்துபட்டது” என்று விண்ணவர்கள் ஆர்த்தனர். முப்பகை வென்ற முனிவர்கள் ஆசிகள் கூறினர். இராமன் வில்லை முறித்து விடுகின்ருன்; விரை வில் சீதையின் திருமணமும் நடந்தேறுகின்றது. இங்ஙனம் கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப் பிரிந்தவர் ஒன்று சேர்வதற்கு விதி செய்து வைக்கும் அறிமுகம் வியக்க வேண்டிய தொன்ருகும். விதிதான் இராமனே விசுவாமித்திரரிடம் கூட்டிவைக்கின்றது. தரு வனத்துள் வேள்வி செய்யும்போது நிருதர் விலக்காதபடி காத்தற்குச் சிறுவர் நால்வரினும் கரிய செம்மலே அனுப் பும்படி விசுவாமித்திரன் கேட்டபோது பின்னல் நிகழப் போவதை அறியாது கண்ணிலான் பெற்று இழந்தான் போல் தசரதன் வருந்துகின்ருன். வருவதை அறியவல்ல வசிட்டன் யோசனைப்படி இராமலட்சுமணர்களைத் தசரதன் முனிவருடன் அனுப்புகின்றன். அவர்கள் மூவரும் மிதிலே நகர் வந்தபோதும் அந்த ஊழ்தான் இராமனும் 12. டிெ:25