பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மலைக் காட்சி: இகப்பெருமானிடம் விடைபெற்றுச் சென்ற இராமன் இலக்குவனுடனும் சீதையுடனும் வனத்தில் புகுகின்ருன். அங்குப் பல காட்சிகளைச் சீதைக்குக் காட்டிக்கொண்டே சென்று, இறுதியில் எதிர் கொண்டு வரவேற்ற பரத்து வாச முனிவரைக் கண்டு அவர் ஆசிரமத்தில் உபசரிக்கப் பெற்று, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, அவர் யோசனைப்படிச் சித்திர கூட மலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ருன் வழியில் ஒரு பாலை வனத்தைக் கடக்க நேரிடுகின்றது. அம்மூவரும் பாலைவனத்தையும் மெதுவாகக் கடந்து சென்று, "குளிறு வான்மதிக் குழவிதன் சூல்வயிறு ஒளிப்பப் பிளிறு மேகத்தைப் பிடியெனப் பெரும்பனைத் தடக்கைக் க்ளிறு கீட்டுமச் சித்திர கூடத்தைக் கண்டார்: (குளிறும்.ஒலிக்கும் தன்மையுள்ள; வான்.ஆகாயம்; மதிக் குழவி.இளஞ்சந்திரன், பிறை; சூல் தினமணி கதிரில் (17-2-52) வெளிவந்தது. 1. ஜீனம்புகு-47,