பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலக் காட்சி 费懿 வயிறு கருக் கொண்ட வயிறு, பிளிறும் இடிக்கின்ற; பி.டி.பெண்யானை; தடகை . பெரிய துதிக்கை; களிறு . ஆண்யானைi. வானத்தில் மேகம் கருக்கொண்டிருக்கின்றது. சூல் கொண்ட கார்மேகத்தில் பிறைமதி மறைந்திருக்கின்றது. அவ்வாறு கூடிய மேகத்தினிடையே இடி முழக்கம் கேட் கின்றது. எங்கும் ஒரே இருள். இடையிடையே மின்ன லுடன் இடிமுழக்கத்தைக் கேட்கும் ஆண்யான ஒன்று, கூடின மேகத்தைப் பெண்யானை என்று கருதித் தனது பனைமரம் போன்ற துதிக்கையை நீட்டுகின்றது. இத் தகைய காட்சிக்கு இடமாகவுள்ள வானளாவிய சித்திர கூடமலையை இராமன் முதலியோர் காண்கின்றனர். அச்சித்திர கூடமலையில் நீளமாக அசையாது இருக்கும் நீரையுண்டை காளமேகத்துக்கும் யானைக்கும் வேற்றுமை தெரியவில்லை. மலைகளில் மலையாடுகள் குதித்து வரும் போது மலையில் கிடக்கும் மரகத இரத்தினங்களின் ஒளி அவற்றின் மீது படும்போது அந்த ஆடுகள் கதிரவனுடைய பச்சைக் குதிரைகளைப் போல் காட்சியளிக்கின்றன. மதயானைகளையும் விழுங்கவல்ல மலைப் பாம்புகளின் மேல் தோல்கள் மூங்கில்களில் சிக்கிக்கொண்டு காற்ருல் அசைந்து கொண்டிருக்கின்றன. அவை அயோத்திமாநகரிலுள்ள மாளிகைகளில் அசைந்து கொண்டிருக்கும் வெண்ணிறக் கொடிகளைப்போல் காட்சி யளிக்கின்றன. சில மலைப் பாம்புகள் யானையை விழுங்குவதற்குப் பற்றுகின்றன. அவ்யானே மதநீரை மழைபோலச் சொரிவதலுைம் பாம்பு களின் மாணிக்க ஒளி அங்கு வீசுவதனலும் மழைதான் பெய்கின்றதோ?’ என்று அஞ்சி அப்பாம்புகள் அவ் யானையை விட்டு விடுகின்றன; அத்துடன் தமது மணிகளை யும் சிந்தி விட்டுச் செல்கின்றன. பயந்து விழுந்தடித்துச் செல்லும் யானையின் நெற்றியில் வேங்கை மலர்களும் நாகரத்தினங்களும் ஒட்டிக் கொள்ளுகின்றன. அவை பொன் தகட்டில் மணிகள் பதித்த நெற்றிப் பட்டம்.போல்