பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ግ0 கம்பனில் மக்கள் குரல் விளங்குகின்றன, இக்காட்சிகளையெல்லாம் சீதைக்கு இராமன் காட்டிச் செல்லுகின்றன். ஓர் இடத்தில் அற்புதமான நிகழ்ச்சியொன்று நடை பெறுகின்றது. ஒர் ஆண் யானையும் ஒரு பெண் யானையும் சேர்த்தாற்போல் காணப்படுகின்றன. பெண் யானை திறைந்த கருப்பத்துடன் இருக்கின்றது. ஆண் யான மனம் உருகும் காதலுடன் மரத்திலிருந்து ஒரு தழைக் கொத் தைத் துதிக்கையால் ஒடித்து அதைக் கொண்டு மலைப் பொத்திலுள்ள ஒரு பெரிய தேன் கூட்டில் மொய்த்துக் கொண்டிருக்கும் இன் குரலைக் கொண்ட தேனிக்களை ஒட்டு கின்றது. பிறகு நறுமணமுள்ள செந்தேனினைக் கூட்டோடு துதிக்கையால் எடுத்து கருவைத் தாங்கியுள்ள பெண் யானை பருகுமாறு அதன் வாயில் வைக்கின்றது. இதனைக் கம்பன், உருகு காதலின் தழைகொண்டு மழலைவண் (டு) ஒச்சி முருகு நாறுசெங் தேனினே முழைகின்றும் வாங்கிப் பெருகு சூல்இளம் பிடிக் (கு) ஒரு பிறைமருப் (பு) யானை பருக வாயினிற் கையினின்(று) அளிப்பது பாராய்!” (மழலை-இன்குரல்; ஒச்சி-ஒட்டி; முருகு-நறு மணம்: மூழை-மலைப் பொந்து; பெருகுசூல்-முதிர்ந்த கருப்பம்} என்று காட்டுகின்ருன். இக்காட்சியையும் சீதைக்குக் காட்டுகின்ருன் இராமன். குறிஞ்சி நில மகளிர் ஊடல் கொண்டு தம் கணவன் மாரை நாடாதிருக்கின்றனர். அவர்கள் மனமுருகித் ,ே சித்திர சூடம்-12