பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலேக் காட்சி ፕ! தாமாகவே தத்தம் கொழுநரை அடையும் வண்ணம் கின்னர மிதுனங்கள் பாடுகின்றனர். மானிட முகமும் குதிரையுடலும் கொண்ட இத் தேவ சாதியார் கின்னரம் என்னும் இசைக் கருவியினைக் கொண்டு பாடுவதாகக் கவிஞர்கள் கூறுவர். ஒரு பக்கத்தில் திணைப்புனங் காக்கும் மகளிர் குருவிந்தம் என்ற ஒரு வகை மாணிக்கக் கற்களை எறிந்து கதிர்களைத் தின்ன வரும் குருவிகளை வெருவி யோடு மாறு விரட்டுவர். அக்கற்கள் வானிடைச் சென்று பேரொளியுடன் நிலத்தில் வீழ்வது விண்மீன்கள் வீழ்வது போன்றுள்ளது. மற்ருெரு பக்கத்தில் மறத்துறைவேடர் அகிற் கட்டைகளைச் சுடுவதனால் உண்டாகும் புகையும், அறத்துறை அந்தணர் வேள்வித் தீயினின்றெழுந்த புகை யும் ஒன்று சேர்ந்து கருநிற முள்ள பெரிய கொடுமுடி போல் காட்சியளிக்கின்றன. பிறிதொரு புறத்தில் வேங்கை கொங்கு முதலிய மரங்களில் கட்டப் பெற்றுள்ள ஊஞ்சலிலிருந்து கொண்டு பாடிய மகளிரின் குறிஞ்சிப் பண்ணினைச் செவி மடுத்து அசுணமாக்கள் என்ற ஒருவகை இசையறிவிலங்குகள் அவர்களை நோக்கிச் செல்லுகின்றன. பல இடங்களிலும் காணப்பெறும் மாணிக்கப் பாறைகளில் மூங்கிலினம் சொரிந்த முத்துகள் செக்கர் வானத்திடை யேயுள்ள விண்மீன்களை யொத்துள்ளன. இக்காட்சிகளை யெல்லாம் இராமன் சீதைக்கு ஒவ்வொன்ருகக் காட்டிச் செல்லுகின்ருன். சில யானைக் குட்டிகள் தும்பிக்கையால் மலையருவி நீரை முகந்து கொண்டுவந்து மூப்படைந்த முனிவர்களின் கமண்டலங்களில் சொரிந்து அவற்றை நிரப்புகின்றன. இக்காட்சியையும் அவர்கள் காண்கின்றனர். சில ஆண் யானைகள் பிரசவ வேதனையடையும் பெண் யானைகளைத் தம் துதிக்கையால் தாங்கி நிற்கின்றன. மேகங்களின் இடியோசையைக் கேட்டு அதைச் சிங்கத்தின் ஒலிதான் எனக் கருதிச் சில யானைகள் நெறிகெட்டு ஒடுகின்றன. இவற்றையும் இராமன் சீதைக்குக் காட்டுகின்ருன்,