பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைக் காட்சி 73 களுக்குத் தருகின்றன: கிளிகள் மலை நெல்லின் கதிரையும், தினைக் கதிரையும், சோளத்தின் கதிரையும் அவரைகளையும் மூங்கிலரிசிகளையும் தவசிகளின் ஆசிரமங்களில் கொண்டு வந்து சேர்க்கின்றன. இவற்றையெல்லாம் இராமன் சீதைக்குக் காட்டுகின்ரு:ன். இன்னொர் அற்புதமான காட்சி, அக்காட்சியைக் கம்பன், இடிகொள் வேழத்தை எயிற்ருெடும் எடுத்துடன் விழுங்கும் கடிய மாசுணம் கற்றறிக் தவரென அடங்கிச் சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாமித்(து) ஏறப் படிக ளாம்எனத் தாழ்வரைக் ៩៤...ប៉ur urTriu!* இடிகொள் வேழம்-இடிபோல் ஒலிக்கும் யானை; எயிற்ருெரும்-தந்தங்களோடும்; க டி யகொடிய,மாசுணம்-மலைப் பாம்புகள்; தாழ்வு -குற்றம்; தாழ்வரை-மலே அடிவாரம்: என்று காட்டுகின்ருன். மேகத்தினின்று தோன்றும் இடி போல் பிளிறக்கூடிய யானைகளையும் கொம்புகளுடன் விழுங்கவல்ல மலைப் பாம்புகள் கற்றறிந்த பெரியோர்போல் அடக்கத்தை மேற்கொண்டு குற்றமற்ற தவசியர் ஏறிச் செல்வதற்குப் படிகளாக உதவுமாறு மலையடிவாரத்தில் மடங்கி மடங்கிக் கிடக்கின்றன. இக்காட்சியையும் இராமன் சீதைக்குக் காட்டுகின்ருன். - 4, சித்திரக் கூடம்-35