பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கம்பனில் மக்கள் குரல் இவ்வாறு, கினையும் தேவர்க்கும் நமக்கும் ஒ(த்து) ஒருநெறி நின்ற அனகன் அம்கண் ஆயிரம் பெயருடை அமலன் சனகன் மாமட மயிற்(கு)அந்தச் சந்தனம் செறிந்த கனக மால்வரை இயல்பெலாம் தெரிவுறக் காட்டும்" (நினையும்.நம்மால் நினைக்கப்படும்; தேவர்க்கும். தேவர்களின் திறத்தும்; ஒரு நெறி நின்ற ஒரே நிலையில் நிற்கின்ற; அனகன்-குற்ற மற்றவன்; அமலன்.குற்றமற்றவன்; சனகமா மடமயில். சீதா பிராட்டி, கனகம்.பொ ன்: இயல்பு-இயற்கை வளம்.! இராமன் சீதைக்கு மலைவளத்தை காட்டிச் செல்லு கின்ருன் என்று சொல்லும்போதே கம்பனுடைய இராம பக்தி பீறிட்டுக்கொண்டு வெளி வருகின்றது. தேவர் களிடத்தும் நம்மிடத்தும் ஒரே நிலையில் நிற்கின்ருனும் இராமன்; அவன் குற்றமற்றவனம்; ஆயிரம் திருப் பெயர் களேக் கொண்ட குற்றமற்ற திருமாலின் திருவவதார மூர்த்தியாம் அவன்; அத்தகையவன் மயில்போன்ற சாயலை யுடைய சனகன் புதல்வியாகிய சீதாப்பிராட்டிக்குச் சந்தன மரங்கள் நெருங்கியுள்ள பொன்னத் தன்னிடத்தே கொண்ட சித்திரகட மலையின் இயற்கை வளங்களையெல் லாம் காட்டிக்கொண்டு செல்லுகின்ருன். இக்காட்சிகளைக் காணும் நாமும் குறிஞ்சித் திணையின் சூழ்நிலையைக் கண்டு களிக்கின்ருேம்; உதக மண்டலம், கொடைக்கானல் போன்ற மலை நாடுகளில் இருப்பது போன்ற மனநிறை வினையும் பெற்று மகிழ்கின்றேம். 5. சித்திரக்கூடம்-1