பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. விளையும் பயிர்: இலங்கை வேந்தனுடைய மூத்த குமாரன் மேகநாதன் என்போன் இராவணனுக்கு மயன் மகளாகிய மண்டோதரி வயிற்றில் பிறந்தவன். வீரர்களில் தலைசிறந்தவன். இளமையிலேயே தேவந்திரனுடன் போரிட்டு அவனைத் தோற்கடித்து சிறை செய்து கொண்டு வந்து தன் தந்தை முன் நிறுத்தி இந்திரஜித்து' என்ற சிறப்புப்பெயர் பெற்ற வன். இராமாயணத்தில் கம்பன் இவனே ஒரு சிறந்த வீரனுகப் படைத்துக் காட்டுன்கிருன். பல இடங்களில் இவனது வீரச் செயல்களைக் காண்கின்ருேம். சிறந்த வீரனும் யூகியுமான அநுமன் சீதையைத் தேடிச் சென்ற போது முதன் முதலில் நள்ளிரவில் இராவணனது மாளிகை யில் இவனை உறங்கும் நிலையில் காண்கின்ருன். இதனைக் கம்பன், முக்கண் நோக்கினன் முதல்மகன் அறுவகை முகனும் திக்கு நோக்கிய புயங்களும் சிலகரந்து அணையான்

  • தினமணிக் கதிர் (13.1-52) இதழில் வெளிவந்தது.