பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii காலத்துப் புலவர் ஒருவர் இயற்றினதாக அவன் பெயரில் உலவவிட்டாரா?” (பக்.,107) என்ற ஆராய்ச்சியில் இறங் காமல் கம்பன் மேழிச்செல்வத்தைப் பாராட்டுவதை மட்டி லும் விளக்குகின்றது. கம்பனில் உருக்காட்சிகள்' என்ற இறுதிக் கட்டுரை ஆங்கிலத் திறய்ைவு முறையில் கம்பனே நுகர்வதற்கு வழியமைத்துக் காட்டுகின்றது. பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் பல்துறை அறிஞர். பல துறைகளையும் சிறப்பாக அறிவியல் துறைகளே முறை யாகப் பயின்று அவற்றில் ஆழ்ந்த புலமையைஅடைந்தவர். சிறந்த சிந்தனையாளர். பல் வேறு துறைகளில் படைப் பிலக்கியங்களை வழங்கி தமிழன்னையைப் பெருமிதத்துடன் களிக்கச்செய்து வருகின்றவர். இவரை நடமாடும் கலைக் களஞ்சியம்' என்று கூறினாலும் அக்கூற்று மிகைபடக் கூறியதாகாது. அறிவியல்முறையில் (Scientific Method) பயிற்சி பெற்ற அறிஞரின் நோக்கும் போக்கும் ஆழமாகவே இருக்கும் என்ற உண்மைக்கு இப்பேராசிரியர் ஒர் எடுத்துக் காட்டாகவே அமைகின்றார். பார்ப்பதற்கும், பழகுவதற் கும் இனியவர்; படைப்புகளையும் இனிமையாக வழங்கு கின்ருர் நல்ல உடல் நலத்துடனும் மனவளத்துடனும் திகழும் இத்தகைய 60 ஆண்டுகட்கு மேல் பழுத்த இளைஞர் களின்'சேவை நாட்டுக்குத் தேவை. இத்தகைய பெரியோர் களே ஒல்லும் வகையெல்லாம் மொழி வளர்ச்சிக்கும் பயன் படுத்திக் கொள்வது அரசின் கடமை. 56 நூல்களைப் படைத்த பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் பல்லாண்டுகள் வாழ்க! வளர்க அவர்தம் தமிழ்ப் பணி!!’ என்று வாழ்த்து கின்றேன். ಆಣ್ಣಗೆ சு. இரத்தினவேல் பாண்டியன்