பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கம்பனில் மக்கள் குரல் ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின் ருனைப் புக்கு நோக்கினன்' (முக்கண் நோக்கினன் முதல் மகன் - முருகன்; கரந்து மறைத்து, ஒக்க நோக்கியர் . தன் அழகுக்குச் சமமான அழகுடைய மாதர்கள்; என்று காட்டுகின்ருன். மூன்று கண்களையுடைய சிவபெரு மானின் சிறந்த குமாரளுகிய முருகக் கடவுள்தான் தனக்கு இயல்பாகவுள்ள ஆறுமுகங்களிலும் பன்னிரண்டு புயங்களி லும் சிலவற்றை மறைத்து வந்தானே என்று ஐயுறும்படி, கட்டழகு வாய்ந்த மாதரிடையே உறங்குவதைக் கண்ணுறு கின்ருன். குகையில் உறங்கும் சிங்கத்தைப் போன்றவகிைய இவனே யாவன் என்று அதுமல்ை அறுதியிட முடியா விடினும், "இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பலநாள் உளேய உள்ளபோர் இவனுெடும் உளதென. இளைய வீரன்.இலக்குவன்; ஏந்தல்-இராமன்; உளேய.சிரமம் உண்டாகும் படி! உணர முடிகின்றது. பாம்பின் கால் பாம்பறியுமல்லவா? ஒருவீரனே இன்னெரு வீரன்தானே நன்கு அறிய முடியும்? இளைய பெருமாள் கூட இவனுடைய ஆற்றலை வியந்தனன் என்ருல் இவனது திறமையைச் சொல்லவும் வேண்டுமோ? திகும்பலை யாகத்தை அழித்து இலக்குவன் இவனோடு போர்புரியும்போது இவன் தன் ஆற்றல்களை யெல்லாம் ஒருங்கு திரட்டிப் பெருஞ்சமர் விளைவிக்கின்ருன், 1. ஊர்தேடு-148 2. ஷ்ெ -141