பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையும் பயிர் இலக்குவன் இவனுடைய சாரதியையும் தேரையும் அழித்து இவன்மீது அம்புமாரியைப் பொழியும் போதுகூட, இவன் சிறிதும் மனம் உடையாது தன்மீது பாய்ந்த அம்புகளைப் பிடுங்கி அவற்றை இலக்குவன்மீதும் அநுமன்மீதும் பிறர் மீதும் தூவி ஆர்ப்பரிக்கின்ருன். இதனைக் கண்ணுற்ற இளைய பெருமாளும். நன்று, நன்று' என்று மெச்சி மூக்கின் மீது விரலை வைக்கின்ருன். இதனைக் கம்பன். எய்தவன் பகழி எல்லாம் பறித்(து) அவன் என்மேல் எய்யும் கைதடு மாரு(து) உள்ளம் உயிர்இனம் கலங்கா யாக்கை மொய்கணை கோடி கோடி மொய்க்கவும் இளைப்பொன்(று) இல்லான் ஐயனும் இவளுே(டு) எஞ்சும் ஆண்தொழில் ஆற்றல் என்ருன்" (பகழி-அம்பு, கணே-அம்பு; மொய்கணே-ஏராள மான அம்புகள்: ஐயன். இலக்கு வன்; எஞ்சும் ஒழிந்து போகும்) என்று நமக்குக் காட்டி விடுகின்ருன். உலகில் இவனுடன் ஆண்மைத் தொழிலும் வல்லமையும் அழிந்து விடும்!” என்று இலக்குவனே வியந்து கூறுகின்ருன். இவ்வாறு வீரர்கள் மெச்சும் புகழ்பெற்றவன் இந்திரசித்து. மாற்ருரும் போற்றும் இத்தகைய ஒரு சிறந்த வீரன் இளமையில் எப்படியிருந்தான் என்பதை அறிந்து கொள் வதில் நமக்கு ஆர்வம் இருக்கத்தான் செய்கின்றது. நமக்கு ஆசையிருக்கும் என்பதை உணர்ந்தே கம்பநாடனும் அதனை நிறைவேற்றுவதற்கு ஒரு வாய்ப்பையும் உண் டாக்கி அங்கு நமது ஆர்வத்தையும் நிறைவேற்றுகின்ருன், 3. இந்திரசித்து வதை-81