பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T8 கம்பனில் மக்கள் குரல் இந்திரசித்து செய்த போரின் கொடுமையைத் தாங்க முடியாத நிலைமை ஏற்படுகின்றது. வீடணனும் விரைவில் அவனேக் கொன்று விடவேண்டும் என்று இலக்குவனே வற்புறுத்துகின்ருன். இலக்குவன், 'மறைகளே தேறத் தக்க வேதியர் வணங்கற் பாலான் இறையவன் இராமன் என்னும் நல்லற மூர்த்தி என்னில் பிறைஎயிற்(று) இவனைக் கோறி என்(று)ஒரு பிறைவாய் வாளி நிறையுற வாங்கி விட்டான்'..." (மறைகள்-வேதங்கள்; தேறத் தக்க-ஆராய்ந்து அறியத் தக்க; இறையவன்-தலைவன்; பிறை எயிறு-பிறைச்சந்திரன் போன்ற கோரைப் பற்கள்; கோறி-கொல்வாய்) இந்திரசித்தின் தலே அறுபட்டு உடல் மட்டிலும் மின்ன லுடனும் இடியுடனும் : பூமியில் விழும் மேகத்தைப்போல் விழுகின்றது; சற்று நேரத்தில் அவனது தலையும் மண்மீது உருள்கின்றது. இத்தகைய சிறந்த வீரனுடைய இளமைப் பருவத் தைப் பற்றிக் கம்பன் எங்குமே நமக்குக் காட்டவில்லை. இவன் இறந்த பிறகு புத்திர சோகத்தால் புலம்பும் மண்டோதரியின் வாய்மொழியாகத்தான் இவனது இளமைப் பருவம் எவ்வாறு இருந்தது என்பதை நாம் அறி இன்ருேம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற உண்மையையும் நாம் உணர்கின்ருேம். பிற்காலத்தில் ஒரு சிறந்த வீரனுக விளங்கப்போவதற்குரிய அறிகுறிகள் யாவும் இவனது இளமை விளையாட்டுகளிலேயே காணப்பட்டதை நாம் அறிந்து வியப்படைகின்ருேம். 4. இந்திரசித்துவதை-51