பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையும் பயிர் '79 இவனது பிரிவாற்ருமையைக் குறித்து இராவணன் பல வாருகப் புலம்பிப் போன பிறகு இவனது தலையற்ற உடல் கிடந்த இடத்திற்கு மண்டோதரி வருகின்ருள். தாமரைப் பூவினல் கொங்கைகளைப் புடைக்கின்றது போல கைகளால் மார்பில் அடித்துக் கொண்டு வருகின்ருள். வந்து மைந்தன் உடலின்மீது விழுகின்ருள். கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங்கனை உயிரைக் கொள்ள மலையின் மேல் மயில்வீழ்ந் தென்ன மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள்." (கணே-அம்பு; மறுகி-துயரத்தால் கலங்கி) என்பது கம்பன் காட்டும் காட்சி. வேடனுடைய கூரிய அம்பு உயிரைக்கொண்டு செல்லும்போது மயிலானது. மலையின்மீது விழுவதுபோல இவள் இந்திரசித்தின் உடலின் மீது விழுந்தாள் என்று கம்பன் கூறும்போது அதிலுள்ள நயத்தை உணர்ந்து சுவைக்கின்ருேம். சற்று நேரம் உணர்ச்சியற்று அப்படியே கிடக்கின்ருள்; துக்கம் அவள் நெஞ்சை அடைத்து விடுகின்றது. சிறிது நேரத்தில் அயர்ச்சி நீங்கப்பெற்று விம்மி விம்மி கதறத் தொடங்கு பெற்ற மனந்தானே பிள்ளையிள் அருமையை அறிய முடியும்? பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாலூட்டிச் சீராட்டி பாராட்டி வளர்த்தவள் அல்லவா இவள்? தன் மகன் குழந்தையாக இருக்கும்போது நிகழ்ந்த நிகழ்ச்சி களில் ஒன்றிரண்டு அவளது நினைவுக்கு வருகின்றன. அவற்றையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுகின்ருள்; தேம்புகின்ருள். மேகநாதன் தவழ்ந்து விளையாடும் பருவத்தில் ஒர் அற்புதமான நிகழ்ச்சி நடை பெறுகின்றது. அப்பருவத்தில் 5. இராவணன் சோகப்-45