பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கம்பனில் மக்கள் குரல் அவன் வலிமையுள்ள இரண்டு சிங்கங்களைப் பிடித்துக் கொண்டு மாளிகையின் முன்றிலுக்கு வருகின்றன். அங்கு அவற்றை முட்ட விட்டு வேடிக்கை பார்க்கின்ருன். இதனை தினேந்து புலம்புகிருள் மண்டோதரி. தானரிச் சதங்கை ஆர்ப்பத் தவழ்கின்ற பருவம் தன்னில் கோனரி இரண்டு பற்றிக் கொணர்ந்தன; கொணர்ந்து கோபம் மூளுறப் பொருத்தி மாடம் முன்றிலின் முறையி ைேடு மீளரு விளையாட்(டு) இன்னம் காண்பனே விதியி லாதேன்." (தாள்.கால்; அரி-பரல்; ஆர்ப்ப-ஒலிக்க; கோளரி வலிமையுடைய சிங்கம்) என்பது கம்பன் வாக்கு. சதங்கை ஒலியுடன் தவழும் பருவத்தில் செய்த செயலை மண்டோதரியின் புலம்பலி லிருந்துதான் நாம் அறிகின்ருேம். - இன்னுெரு நிகழ்ச்சியினையும் அறிகின்ருேம் அவள் புலம்பவின் வாயிலாக. இவன் சிறு பிள்ளையாக இருக்கும் போது-அம்புலிப் பருவத்தில்-ஒரு சமயம் விண்மதியினைப் பார்த்து அம்புலி அம்மா, இங்குவா!' என்று அழைத்தா தானும், மதியும் இவனுக்குப் பயந்து இவனிடம் வந்து விட்டாளும். அப்படி வந்த சந்திரனேப் பயப்படாதே? என்று சொல்வி அவனே இரண்டு கைகளினலும் வாங்கிக் கொண்டு, அவனுடைய களங்கத்தை முயல் என்று சொல்லிக் கிள்ளிளுளும். அந்நிகழ்ச்சியும் மண்டோதரியின் நினைவுக்கு வரவே அவள், : جسیمِ مبہمہم۔ 5. இராவணன் சோகப்-49