பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையும் பயிர் 81 'அம்புலி அம்ம வாவென்(று) அழைத்தலும் அவிர்வெண் திங்கள் இம்பர்வங் தானை அஞ்சல்: எனஇரு கரத்தின் ஏந்தி வம்புறு மறுவைப் பற்றி முயலென வாங்கும் வண்ணம் எம்பெருங் களிறே காண வேசற்றே எழுந்தி ராயே' |அம்புலி-சந்திரன்; திங்கள்-சந்திரன்; இம்பர். இவ்வுலகம்; வம்புறு.iணுகப் பொருந்திய; மறு-களங்கம்; வாங்கும்-பிடுங்கும்! என்று புலம்புகின்ருள். அந்த நிகழ்ச்சியை இன்ைெரு தடவை எனக்குக் காட்டுவதற்காகவாவது நீ எழுந்திருக்க மாட்டாயா?’ என்று கூறிப் புலம்பும்போதுதான் தாயன்பு வெளிப்படுவதைக் காண்கின்ருேம்; அவலச் சுவையின் உச்ச நிலையை உணர்கின்ருேம். நம்மை அறியாமல் நமக்கும் அழுகை வருகின்றது; அழுதேவிடுகின்ருேம். சிறு பிள்ளையாக இருக்கும்போதே இந்திரனை நாக பாசத்தால் கட்டிக்கொண்டு வந்து தன் தாதையின் முன் நிறுத்தி இந்திரசித்து என்றசிறப்புப் பெயரையும் பெற்ருன் என்று மேலே கூறினேமல்லவா? இதனை மண்டோதரி, கலையினுல் திங்கள் போல வளர்கின்ற காலத் தேஉன் சிலையினல் அரியை வெல்லக் காண்பதோர் தவமும் செய்தேன்.8 (சிலை-வில்; அரி. இந்திரன்) என்று சொல்லிப் புலம்புகின்ருன். 7. இராவணன் சோகப்-50 8. டிெ .47 6-س.تي